Published:Updated:

'துர்கா பூஜையின்போது அஸ்ஸாமில் தாக்குதல் நடத்த அல் காய்தா திட்டம்!'

Vikatan Correspondent
'துர்கா பூஜையின்போது அஸ்ஸாமில் தாக்குதல் நடத்த அல் காய்தா திட்டம்!'
'துர்கா பூஜையின்போது அஸ்ஸாமில் தாக்குதல் நடத்த அல் காய்தா திட்டம்!'
'துர்கா பூஜையின்போது அஸ்ஸாமில் தாக்குதல் நடத்த அல் காய்தா திட்டம்!'

கவுகாத்தி: அஸ்ஸாமில் நுழைய அல் காய்தா பயங்கரவாத இயக்கம் முயற்சித்து வருவதாகவும், துர்கா பூஜையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் தருண் கோகய் தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் இதனை தெரிவித்த அவர், அஸ்ஸாம் மாநிலத்திற்குள் சாலை மார்க்கமாக நுழைய அல் காய்தா பயங்கரவாதிகள் முயற்சித்துவருவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.

இருப்பினும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து நடவடிகைகளையும் தமது அரசு மேற்கொண்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

உல்ஃபா இயக்கத்தினருடன் அல் காய்தாவினர் தொடர்பு வைத்துள்ளனரா? என்ற கேள்விக்கு, " தொடர்பு இருக்கலாம்; தற்போதைக்கு நேரடி தொடர்பு இல்லை என்றபோதிலும், அவர்களுக்குள் தந்திரமான புரிதல் இருக்கிறது...ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை" என்று பதிலளித்தார்.