Published:Updated:

காஷ்மீர் குறித்த பிலாவல் பேச்சுக்கு இந்தியா பதிலடி!

Vikatan Correspondent
காஷ்மீர் குறித்த பிலாவல் பேச்சுக்கு இந்தியா பதிலடி!
காஷ்மீர் குறித்த பிலாவல் பேச்சுக்கு இந்தியா பதிலடி!
காஷ்மீர் குறித்த பிலாவல் பேச்சுக்கு இந்தியா பதிலடி!

புதுடெல்லி: காஷ்மீர் குறித்து பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு இந்தியா வெளியுறவுத்துறை மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறுகையில், ''காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்து கிடையாது. பிலாவல் பூட்டோவின் காஷ்மீர் குறித்த கருத்து, அவர் யதார்த்த நிலையிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளார் என்பதை காட்டுவதாக இருக்கிறது'' என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், ''காஷ்மீர் குறித்த பிலாவல் புட்டோவின் கருத்து, அவரது அனுபவமின்மையையும், இந்திய நாட்டின் சக்தி குறித்து அவருக்கு தெரியவில்லை என்பதையும் காட்டுவதாக இருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கூறுகையில், ''இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடமே தெரியாமல் செய்யும் வல்லமை உண்டு. போரை இந்தியா விரும்பாததால் அவ்வாறு செய்யவில்லை'' என்றார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சங்கர் பிரசாத் கூறுகையில், காஷ்மீர் குறித்த பிலாவல் பூட்டோவின் பேச்சை பார்க்கும்போது, அவர் தான், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை அனுப்புகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது'' என்றார்.