Published:Updated:

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

Published:Updated:

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

பில்டர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது கட்டுமான விவரங்களை  தங்களிடம் அளிக்க வேண்டும் என சிஎம்டிஏ போட்டுள்ள கிடுக்குப்பிடியால், மவுலிவாக்கம் போல அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்குப் பிறகு கட்டுமான நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து பலவகையிலும் மக்களுக்கு அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கட்டட விபத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் கொடுத்த அறிக்கை அடிப்படையில், இந்த அறிக்கையை கட்டுமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என சிஎம்டிஏ  குறிப்பிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடுகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கி வருகிறது. திட்டம் மற்றும் வரைபட அனுமதி தவிர, கம்ப்ளீஷன் சான்றிதழும் சிஎம்டிஏ மூலமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அனுமதி வாங்கிய பிறகு கட்டுமான தவறுகளை கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. மேலும் முறையாக கட்டி வருகிறார்களா என்பதை நேரடியாக ஆய்வு செய்வதும் சிரமம் என்கின்றனர் சிஎம்டிஏ அதிகாரிகள்.

இந்த நிலையில் இது தொடர்பாக 'கிரடாய்' தனது உறுப்பினர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வலியுறுத்தி

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கிரடாய் தலைவர் ஆர். குமார்  ‘‘கட்டுமான விபத்துக்களை தவிர்ப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்கும் அதே சமயம் அதிகாரிகள் இதை காரணம் காட்டி காலதாமதப்படுத்தக்கூடாது. சமீப காலத்தில் அடுக்குமாடி வீடுகளில் விலை குறைந்தே விற்பனையாகிறது. அதாவது மாதம் ரூ 700 கோடியாக இருந்த சென்னை ரியல் எஸ்டேட் சந்தை, ரூ. 550 கோடியாக குறைந்துள்ளது. சிஎம்டிஏ-வின் இந்த அறிவிப்பு மூலம் மக்களிடம் கட்டுமான தரம் குறித்த நம்பிக்கை அதிகரிக்கும்.

இது தொடர்பாக பில்டர்களுக்கும் ஆலோசனை கொடுத்து வருகிறோம். பில்டர்கள் தாங்கள் மேற்கொள்ளும் வேலைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையாக அளிக்க வேண்டும். இந்த அறிக்கையில் அரசு அனுமதித்துள்ளபடி கட்டுமான வேலைகளை நடந்துள்ளது என்பதை உறுதிபடுத்தும்விதமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

இது குறித்து முன்னணி கட்டுமான நிறுவனமாக சோழா பவுண்டேஷன் சுந்தரத்திடம் பேசினோம்.

‘‘பில்டர்களுக்கு சிஎம்டிஏ வலியுறுத்தியுள்ள இந்த ஆலோசனையை வரவேற்கிறேன். மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்குக்குப் பிறகு சிஎம்டிஏ எடுத்த இந்த முடிவு  பில்டர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்துகொள்ள உதவும். மேலும் அரசு அனுமதிகள்படிதான் கட்டி வருகிறோம் என்பதை பொதுமக்களுக்கும் இதன் மூலம் சொல்ல முடியும்.

அடுக்குமாடி கட்டுமானம்: பில்டர்களுக்கு சிஎம்டிஏ கிடுக்குப்பிடி...!

அடுக்குமாடி கட்டிடம் என்றால் எத்தனை மாடிகளுக்கு அனுமதி வாங்கப்பட்டது, தற்போதுவரை முடிந்துள்ள வேலைகள் என்ன? என்பதை புகைப்படத்துடன் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பில்டர் ஏழு மாடி கட்டடம் கட்ட அனுமதி வாங்கியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்தில் அவர் மூன்று மாடிவரை கட்டி முடித்திருக்கிறார் என்றால் அதை புகைப்பட ஆதாரத்துடன் சிஎம்டிவுக்கு கொடுக்க வேண்டும். அடுத்த மூன்று மாதத்தில் அதுவரை முடிந்துள்ள வேலைகள் குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும்.

இப்படி கம்பீளஷன் சான்றிதழ் வாங்கும்வரை அறிக்கையாக கொடுக்க வேண்டும். இதனால் கட்டுமான தரம் குறித்து தெளிவாக தெரிய வரும். எதிர்காலத்தில் மவுலிவாக்கம் போல அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்’’ என்றார்.

சிஎம்டிஏ அதிகாரிகள் ஒவ்வொரு கட்டடத்தையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் இதைக் காரணம் காட்டி அதிகாரிகள் காலதாமதம் செய்தால் பில்டர்கள் மேலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் வீடுகளின் விலையும் அதிகரிக்க கூடும்.

- நீரை.மகேந்திரன்