Published:Updated:

அஞ்சல் துறையை நவீனப்படுத்த ரூ.1877 கோடி: அமைச்சர்

அஞ்சல் துறையை நவீனப்படுத்த ரூ.1877 கோடி: அமைச்சர்
அஞ்சல் துறையை நவீனப்படுத்த ரூ.1877 கோடி: அமைச்சர்

புதுதில்லி, ஆகஸ்ட் 17, 2011

அஞ்சல் துறையில் அஞ்சல் அலுவலகங்கள், தந்தி அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் இதுசார்ந்த இதர அலுவலகங்களை கணினி மயமாக்க தகவல் தொழில்நுட்ப நவீனமய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ##~~##

தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றுக்காக ரூ.1877.2 கோடி செலவிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சச்சின் பைலட் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

தகவல் மையத்திற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மையம், பேரிடர் சீரமைப்பு மையம், அனைத்து அஞ்சலகங்களையும் இணைக்கும் இணைய வசதி, கிராமப்பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை இணைக்கும் வசதி ஆகியவை செயல்படுத்தப்படும். 

தந்தி, வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கணக்கு மற்றும் மனித வள மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சல் சேமிப்பு கணக்கு, காப்பீட்டு வசதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பணவிடை ஆகியவற்றுக்கான கணினி வழி  தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயிற்சி, மாற்று நிர்வாகம், மாற்று மேலாண்மை திறன், திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்கவும் திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான திட்ட மேலாண்மை நடவடிக்கைகளும் அமலாக்கப்படும். 

இந்திய அஞ்சல் தொழில்நுட்ப திட்டம் 2012 ன் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் துறைகளையும் கிளை அஞ்சல் அலுவலகங்களையும் இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. 

கையிருப்பு நிதி வசதியின் அடிப்படையில் இந்த  தகவல் தொழில்நுட்ப திட்டம் 2012-13 ஆம் ஆண்டில் அமலாக்கப்படும். இத்தகவலை மத்திய தொலைத் தொடர்பு மற்றம் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சச்சின் பைலட் மக்களவையில் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு