Election bannerElection banner
Published:Updated:

நல்லன அருளும் நவராத்திரி!

நல்லன அருளும் நவராத்திரி!
நல்லன அருளும் நவராத்திரி!

நல்லன அருளும் நவராத்திரி!

நல்லன அருளும் நவராத்திரி!

இந்த உலகை காத்து அருளும் அம்பிகை நமக்கெல்லாம் வேண்டிய வரங்களை அருளும் காலம்தான் நவராத்திரி.

நவராத்திரி என்பது இரண்டு வகையாக கொண்டாடப்படுகிறது. ஒன்று சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்கள்- வசந்த நவராத்திரி, மற்றொன்று புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை சாரதா (சரத்) நவராத்திரி என்றும் கொண்டாடப்பகிறது. ஒன்பது நாட்கள் இரவு நேரங்களில் விரதமிருந்து அம்பிகையை போற்றுவதே இந்த நவராத்திரி.

விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, பூஜை மண்டபம் அமைக்க வேண்டும், அந்த இடம் சமமாக இருக்க வேண்டும். பசுஞ்சாணத்தால் மெழுகி கோலமிட வேண்டும். அந்தக் கோலத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். நான்கு மூலைகளிலும் தூண்கள் அமைத்து, தொரனத்தால் அலங்கரிக்க வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மேடை அமைத்து, அதில் அம்பிகையின் சிலையை வைத்து, அம்பாளை அலங்கரிக்க வேண்டும். நவராத்திரி விரதம் இருக்க அம்பிகையிடம் ஆசி பெற்று பூஜைகளை துவங்க வேண்டும். நமது விரத முறையில் வீட்டில் கொலு  வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.

நல்லன அருளும் நவராத்திரி!

கொலு

ஓரறிவு முதல்  படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் காத்து ரட்சித்து வரும் அம்பிகை வரையிலான பொம்மைகளை நவராத்திரி கொலுவில் இடம் பெற செய்ய வேண்டும். கொலுவில் குறைந்தபட்சம் ஒன்பது படிகளாவது இடம்பெற வேண்டும்.

கீழிருந்து முதல் படியில் மரம், செடி போன்ற ஓரறிவு போன்றவை.
2-வது படி- ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.
3-வது படி- எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்கள்.
4-வது படி- பறவை இனங்கள்
5-வது படி- பசு, யானை முதலான ஐந்தறிவு ஜீவன்கள்.
6-வது படி- மனிதர்கள்.
7-வது படி- தெய்வ அவதாரங்கள்.
8-வது படி- மும்மூர்த்தியரும், தேவியரும்.
9-வது படி- ராஜராஜேஸ்வரியின் வடிவமும் கலசமும் இடம் பெற வேண்டும்.

கோலம்

நவராத்திரியில் பிரதானமாக பார்க்கப்படுவது கோலம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பொருட்கள் கொண்டு கோலமிட வேண்டும்.

முதல் நாள்- அரிசி மாவு கொண்டு பொட்டு கோலம் போடா வேண்டும்.
2-வது நாள்- கோதுமை மாவு கொண்டு கட்டம் கோலம் போடவும்.
3-வது நாள்- முத்து வைத்து மலர் வகை கோலம்.
4-வது நாள்- அட்சதை கொண்டு படிக்கட்டு வடிவ கோலம்.
5-வது நாள்- கடலை கொண்டு பறவையினம் போல.
6-வது நாள்- பருப்பு கொண்டு தேவியின் நாமம்.
7-வது நாள்- மலரால் திட்டாணி வகை கோலம்.
8-வது நாள்- காசு கொண்டு பத்மம் கோலம்.
9-வது நாள்- பச்சைக் கற்பூரம் கொண்டு ஆயுதக் கோலம்.

நல்லன அருளும் நவராத்திரி!

நைவேத்தியம்

நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான  நைவேத்தியம் படைத்து தேவியை வணங்க வேண்டும்.

முதலாவது நாள்    - காராமணி சுண்டல்
இரண்டாவது நாள் - கொண்ட கடலை சுண்டல்,புளியோதரை
மூன்றாவது நாள் - மொச்சை சுண்டல், சக்கரை பொங்கல்
நான்காவது நாள் - பட்டாணிச் சுண்டல், கடம்பம் சாதம்
ஐந்தாவது நாள் - கடம்பம் சுண்டல், தயிர் சாதம்
ஆறாவது நாள் - வேர்க்கடலை சுண்டல், எலுமிச்சை சாதம்
ஏழாவது நாள் - சசுண்டல், தேங்காய் சாதம்
எட்டாவது நாள் - சுண்டல், பால் சாதம்
ஒன்பதாவது நாள் - பாசி பயிறு சுண்டல், கல்கண்டு சாதம்.

நல்லன அருளும் நவராத்திரி!

தெய்வங்கள் அனுஷ்டித்த நவராத்திரி

இந்த உலகில் மானிடராய் பிறந்தவர்கள் மட்டுமின்றி, மனித ரூபத்தில் பிறந்த தெய்வங்களும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து இருக்கிறார்கள்.

*ஸ்ரீராமன் நவராத்திரியை அனுஷ்டித்து தான் சீதாதேவியை மீட்டு வந்தார்.

*சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தே திரிபுர தகனம் செய்தார்.
 
இந்தியா முழுதும் தசரா என்ற பெயரில் இந்த நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் விரதமிருந்து அம்பிகையை ஆராதிப்போம், வேண்டிய வரங்களை பெறுவோம்.

இ.லோகேஸ்வரி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு