Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஜெயலலிதாவைவிட கருணாநிதி பண்பு மிக்கவர்’ என்று விஜயகாந்த் சொல்கிறாரே?

கழுகார் பதில்கள்!

திருமண மண்டபத்தை இடித்ததை அவ்வளவு பக்குவமாக ஏற்றுக்கொண்ட விஜயகாந்தின் பெருந்தன்மையைப் பாராட்டத்தான் வேண்டும்!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தாராமே... உண்மையா?

கழுகார் பதில்கள்!
##~##

இரண்டு முறை அந்த விருப்பத்தை மன்மோகன் சிங் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். அவரது உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை. இதய பலவீனம் காரணமாக அவரால் நீண்ட நேர ஆலோசனைகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. வியாழக்கிழமைதோறும் நடக்க வேண்டிய அமைச்சரவைக் கூட்டம்கூட சில வாரங்கள் நடக்காமல் இருந்தது. அப்போது, பதவி விலகலாம் என்று நினைத்தார்.

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலை​வராக ஆக்கும்போது, 'நான் வேண்டுமானால் விலகிவிடுகிறேன். பிரதமர் பதவியையும் சேர்த்து ராகுல் கவனிக்கட்டும்’ என்று மன்மோகன் சொல்லியிருக்கிறார். இரண்டு முறையும் அது சோனியாவால் மறுக்கப்பட்டது. இவர் விலக வேண்டும் என்று சோனியா நினைத்தபோது, மன்மோகன் விலகவில்லை. மன்மோகன் விலக நினைத்தபோது, சோனியா விடவில்லை.

திடீரென ஒருநாள் வைகை ஆற்றில் வெள்ளம் வந்ததாம். கரை ஓரத்தில் தங்கியிருந்தவர்கள் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் வெள்​ளத்தில் அடித்து வந்தது. பணம், நகை, பொருட்கள், மரப் பெட்டிகள் என மிதந்து வந்துள்ளது. ஒவ்வொருவரும் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொள்ளத் துடித்தனர். அப்போது, கறுப்பாக பெரிய பொருள் ஒன்று உருண்டு வந்துள்ளது. பெரிய மரப்பெட்டி உருண்டு வருகிறது என்று ஆசையாய் ஒருவன் பிடித்தானாம். பிடித்த பிறகுதான் தெரிந்தது, அது கரடி என்று. இப்போது அவன், கரடியைவிடத் தயாராகிவிட்டான். ஆனால், கரடி அவனை​விடத் தயாராக இல்லை.

மன்மோகனுக்கும் காங்கிரஸுக்கும் நடக்கும் கண்ணாமூச்சிக்குப் பொருத்தமான கதை இதுதான்!

 கூண்டுக்கிளியான சி.பி.ஐ-க்கு உச்ச நீதிமன்றமாவது சுதந்திரம் பெற்றுத்தருமா?

உச்ச நீதிமன்றத்தையும் கூண்டுக்கிளியாக ஆக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள்!

 வி.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

கழுகார் பதில்கள்!

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், 'சுப்ரீம் கோர்ட் கருத்துச் சொல்லக் கூடாது. உத்தரவுதான் போட வேண்டும்’ என்கிறாரே... சரியா?

சுப்ரீம் கோர்ட் கருத்துச் சொல்வதையே இவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், உத்தரவு போட்டால் எப்படித் தாங்கு​வார்கள்?

கருத்து, உத்தரவு என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தின் அதி​காரத்தில் யாரும் குறுக்கே நிற்க முடியாது.

கருத்துச் சொல்லவோ, உத்தரவு போடவோ அதிகாரம் இல்லாத திக்​விஜய் சிங்கே இந்தத் துள்ளு துள்ளும்போது, அதிகாரம் படைத்த நீதி​பதிகள் சும்மா இருப்​பார்களா?

 எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

கழுகார் பதில்கள்!

தமிழக அரசு சார்பில் அரசவைக் கவிஞர் பதவிக்கு யாரையும் இப்போது நியமிப்பது இல்லையே ஏன்?

எத்தனை பேரை நியமிப்பது? அமைச்சர்​களும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்​களும் முதல்வரைப் பாராட்டுவதைப் பார்த்தால், சுமார் 100 பேரை அரசவைக் கவிஞர்​களாக நியமிக்க வேண்டும்.

 கே.ராம்குமார், சென்னை-6.

கழுகார் பதில்கள்!

தி.மு.க-வில் இருந்துகொண்டே கச்சத்தீவு விவகாரத்தில் அறிக்கைவிடுகிறார் அரங்கநாயகம். அ.தி.மு.க-வில் இது சாத்தியமா?

தி.மு.க-வில் இருப்பதாக அரங்கநாயகம் சொல்கிறார். ஆனால், அதை தி.மு.க. ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு முன், ம.நடராசன் நடத்திய விழாவில் அரங்கநாயகம் பங்கேற்றதாகவும், அதிலிருந்தே அவருக்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தி.மு.க-வினர் சொல்கின்றனர்.

 க.சுல்தன் ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

கழுகார் பதில்கள்!

கர்நாடகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமரும் காலம் எப்போது கனியும்?

காங்கிரஸைவிட சிறியதாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தேயும்போது வேண்டுமானால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம். அப்படி நடக்குமா என்ன?

 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

என்.டி.ஆரை எதிர்த்து கட்சி ஆரம்பித்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடு, இன்று என்.டி.ஆரின் உருவச் சிலையைத் திறந்து வைத்திருக்கிறாரே?

பொதுவாக அரசியலில் வெளியில் இருந்துதான் வேல் பாய்ச்சப்படும். குடும்பத்துக்குள் இருந்தே குத்து அனுபவித்தவர் என்.டி.ராமாராவ். அவர் ஆட்சியைப் பிடிப்பார் என்று யாரும் கனவில்கூட நினைக்கவில்லை. கட்சி ஆரம்பித்த ஒன்பதாவது மாதமே (1983) ஆட்சியைப் பிடித்தார். மந்திரி பாஸ்கர ராவ் செய்த துரோகத்தின் காரணமாக பதவியை இழந்து, மீண்டும் முதல்வராகவும் ஆனார். வெளிப் பகையை வென்ற அவரால் உள் பகையை உணர முடியவில்லை. அதற்கு ராமாராவ் செய்துகொண்ட இரண்டாவது திருமணம் முக்கியக் காரணம் ஆனது. சித்தி சிவபார்வதியை ஏற்க மூத்த மனைவி தாரகத்தின் வாரிசுகள் விரும்பவில்லை. எனவே, மருமகன் சந்திரபாபு நாயுடு அஸ்திரத்தை எடுத்தார். தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள் 221 பேரில் 174 பேரின் ஆதரவு சந்திரபாபு நாயுடுவுக்குக் கிடைத்தது. இந்த மனவருத்தத்திலேயே மரணம் அடைந்தார் என்.டி.ஆர்.

அதன் பிறகு நாயுடுவின் செயல்பாடுகள் தீவிரமாகின. ஆந்திராவின் நகர்ப்புற வளர்ச்சியில் மட்டும் அக்கறை காட்டியதால், ஆட்சியை இழந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் நாயுடுவின் செல்வாக்கு சமீப காலமாகக் குறைந்துவிட்டது.

காங்கிரஸா அல்லது ராஜசேகர ரெட்டி மகனா என்ற போட்டியில் நாயுடுவின் செல்வாக்கு பின்தங்கி இருக்கிறது. இதைச் சரிக்கட்டுவதற்கு என்.டி.ராமாராவ் பிரபலத்தைப் பயன்படுத்தநாயுடு நினைக்கிறார். அதனால்தான் இந்தச் சிலைதிறப்பு!  

 இல.செ.வெங்கடேஸ்வரன், சத்துவாச்சாரி.

கழுகார் பதில்கள்!

நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானதா?

சட்ட ஆட்சி (ரூல் ஆஃப் லா) நடக்கும் நாட்டில் நீதிமன்றத் தீர்ப்புதான் இறுதியானது.

 ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்!

இலங்கைப் பிரச்னையில் இந்தியா நடிக்கிறது என்பது என் கருத்து. சரியா?

இந்தியா மறைக்கிறது என்பதே சரியானது!

 நாசரேத் விஜய், கோவை-6.

கழுகார் பதில்கள்!

இந்த தேசத்தைப் பற்றிய கனவுகள் ஏதேனும் உண்டா?

நினைப்பு, சொல், செயல் எனப்படும் மூன்றும் ஒன்று​பட்டிருக்கும் நிலையே உயர்நிலை எனப்படுகிறது.

'வாயன்று சொல்லி மனமொன்று சிந்தித்து

நீயன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்’ என்கிறார் திருமூலர். இத்தகைய மனிதர் கூட்டம் பெருக வேண்டும் என்பதே கனவு!

கழுகார் பதில்கள்!