Published:Updated:

'தூய்மை இந்தியா': மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'தூய்மை இந்தியா': மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
'தூய்மை இந்தியா': மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

'தூய்மை இந்தியா': மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

'தூய்மை இந்தியா': மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

காத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2 ல் தனது கனவு திட்டமான 'ஸ்வச்ச பாரத்' எனப்படும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதனை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வீடுகள், பணியிடங்கள், சாலைகள், அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்துவதன் மூலம், இந்த இயக்கத்தை வெற்றிபெற செய்ய முடியும் என்று கூறினார்.

இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ரயில்வே நிலையங்களில் இந்தத் திட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரம் 2 மணி  நேரம் என வருடத்துக்கு 100 மணி நேரம் இந்தத் தூய்மைப் பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள மோடி, வரும் 2019 க்குள் முழுமையான 'தூய்மை இந்தியா' என்ற இலக்கை அடைவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோடியின் இந்த தூய்மை திட்டம் இந்தியர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி,  'தூய்மை இந்தியா' இலக்கு நிறைவேறுமா? இதில் மக்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள். இத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகளை முன்வைத்து விவாதிக்கலாம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு