Published:Updated:

மோகன் பகவத் உரை செய்தி கண்ணோட்டத்தில் ஒளிபரப்பானது: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!

விகடன் விமர்சனக்குழு
மோகன் பகவத் உரை செய்தி கண்ணோட்டத்தில் ஒளிபரப்பானது: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!
மோகன் பகவத் உரை செய்தி கண்ணோட்டத்தில் ஒளிபரப்பானது: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!
மோகன் பகவத் உரை செய்தி கண்ணோட்டத்தில் ஒளிபரப்பானது: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!

புதுடெல்லி: மோகன் பகவத் உரை செய்தி கண்ணோட்டத்தில்தான் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது என்று பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பானதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ் சர்ச்சைக்குரிய இயக்கம் என்றும், மோகன் பகவத்தின் உரையை நேரடியாக ஒளிப்பரப்பியது தவறான முன் உதாரணம் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீக் ஷித் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா, ''ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை பிரசாரம் செய்வதற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தாக்குதல்கள் வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பதிலளித்துள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் அர்ச்சனா தத், மற்ற செய்திகளை போலவே, மோகன் பகவத்தின் உரையையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், செய்தியை வெளியிடும் கண்ணோட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.