Published:Updated:

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற தேவகவுடாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு!

விகடன் விமர்சனக்குழு
தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற தேவகவுடாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு!
தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற தேவகவுடாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு!

பெங்களூரு: தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற தேவகவுடாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி தெருக்களை சுத்தம் செய்தார். அதேபோல், நாடு முழுவதும் பா.ஜ.க. தலைவர்களும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற தேவகவுடாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு!

இதேபோல், ஹாசனில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டு தெருக்களை சுத்தம் செய்தார். தேவகவுடாவின் இந்த செயலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் சமூக இணையதளத்தில், ''ஒரு முன்னாள் பிரதமரான நீங்கள் (தேவகவுடா) தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்றது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களை தனிப்பட்ட முறையில் நான் பாராட்டுகிறேன்'' எனக் கூறியுள்ளார்.