Published:Updated:

உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்கள்... அமைதி காக்கும் அதிமுக தலைமை!

விகடன் விமர்சனக்குழு
உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்கள்...  அமைதி காக்கும் அதிமுக தலைமை!
உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்கள்... அமைதி காக்கும் அதிமுக தலைமை!

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொண்டு வருகிறார்கள். இதை தடுக்க வேண்டிய அ.தி.மு.க. தலைமை மௌனம் காத்து வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்கள்...  அமைதி காக்கும் அதிமுக தலைமை!

இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கடந்த 1ஆம் தேதி மாலை 5 மணி அளவில் உண்ணாவிரதம் முடிந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது உண்ணாவிரத பந்தல் பக்கமுள்ள ஒரு டீக்கடையின் அருகே திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள மாநகர பஸ் டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த சமயபுரத்தை சேர்ந்த ஜெயக்கண்ணன், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் வந்த அவரை கண்ட அ.தி.மு.க.வினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்கள்...  அமைதி காக்கும் அதிமுக தலைமை!

இதேபோல், கடந்த 28ஆம் தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் பிளஸ்-2 படித்து வந்த நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார்.

உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்கள்...  அமைதி காக்கும் அதிமுக தலைமை!

தேனி சின்னமனூர் ராசாத்தி அடுத்து தேனி அருகேயுள்ளள சின்னமனூர் சொக்கநாதபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மனைவி ராஜாத்தி. அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினராக இருந்த இவர், கடந்த 2ஆம் தேதி  திடீரென வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த அவர் ‘ஜெயலலிதாவுக்கு எதிராக சதி நடக்கிறது, நான் இறந்தாலாவது அவரை விடுதலை செய்வீர்களா?’ என்று கோஷமிட்டபடியே தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.  இரண்டு குழந்தைகளுக்கு தாயான ராசாத்தி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதேபோல், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, இதுவரை தமிழகத்தில் 66 பேர் பலியாகியுள்ளனர்.

இப்படி, ஜெயலலிதாவின் விடுதலைக்காக தமிழகம் முழுக்க பலர் தன்னுடைய உயிரை மாய்த்துகொண்டிருக்க, பதவியில் இருந்தபோது தனக்காக உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அறிக்கைவிட்ட ஜெயலலிதாவோ, அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க.வோ,  முதல்வர் பன்னீர்செல்வமோ இதுவரை இதற்காக ஒரு அறிக்கைகூட வெளியிடாமல் இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.

சி.ஆனந்தகுமார்