Published:Updated:

ஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்!

ஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்!
ஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்!
ஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்!

பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேரும் பரப்பன அக்ராஹாரா சிறையில் ஒரே அறையில் இருக்கிறார்கள் என சிறைத்துறை டி.ஐ.ஜி. கூறியுள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்ஹா இன்று (5ஆம் தேதி) பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். காலை, மதியம், மாலை என 3 வேளையும் மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்து வருகின்றனர்.

இன்று காலை முதல், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் இருக்கின்றனர். இன்று மாலை வரை அவர்கள் மூன்று பேரும் ஒரே அறையில்தான் இருப்பார்கள்'' என்றார்.