Published:Updated:

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 7ஆம் தேதி தனியார் பள்ளிகள் மூடல்!

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 7ஆம் தேதி தனியார் பள்ளிகள் மூடல்!
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 7ஆம் தேதி தனியார் பள்ளிகள் மூடல்!
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 7ஆம் தேதி தனியார் பள்ளிகள் மூடல்!

சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வரும் 7ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோ கூறுகையில், ''ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பள்ளிகளை ஒரு நாள் மூடுவதற்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 7ஆம் தேதி தமிழகத்திலுள்ள 4,500 தனியார் பள்ளிகளும் செயல்படாது'' என்றார்.