Published:Updated:

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா

Vikatan Correspondent
நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா
நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா
நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆனந்த் சர்மா

மும்பை: நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆனந்த் சர்மா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆனந்த் சர்மா கூறும்போது, ''நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஒரு தவறான மாய பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் ஐ.நா. சபையில் உரையாற்றியபோது 3-ல் இரண்டு பகுதி இருக்கைகள் காலியாகவே இருந்தது.

மோடிக்கும் அவரது அரசிற்கும் மட்டுமே நல்ல நாட்கள் வந்துள்ளது. ஆனால், வாக்களித்த மக்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் அதுபோன்ற ஒரு நல்ல நாட்கள் இன்னும் வரவில்லை. தான் ஆட்சிக்கு வந்த பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் இமேஜை உயர்த்தியிருப்பதாக மோடி கூறுவது தவறானது.

மோடி தனிப்பட்ட முறையில் அதிகாரங்களை ஒருமைப்படுத்தி 100 நாட்களுக்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளை கட்டாயப்படுத்தி இருக்கிறார். அவ்வளவுதான். ஆனால், அவர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. விலைவாசியை குறைப்பதாக கூறினார்கள். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் இன்னும் துவங்கவேயில்லை.

வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக சொன்னார்கள். ஆனால், வேலை வாய்ப்புகள் உயர்ந்ததாக எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்தியாவின் பட்ஜெட்டை போல 7 மடங்கு அதிகமான கருப்பு பணத்தை மீட்க போவதாக சூளுரைத்தார். இனிமேல் 7 ஆண்டுகளுக்கு பட்ஜெட்டை பற்றியே கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் கூறினார். ஆனால், என்ன நடந்திருக்கிறது. 7 மடங்கை விடுங்கள், 7 சதவீத கருப்பு பணத்தைக் கூட மோடி அரசு இன்னும் மீட்கவில்லை.

இப்படியெல்லாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து மக்களை தவறாக வழிநடத்தி வரும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்" என்றார்.