Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'டில்லி சட்டமன்றத் தேர்தலில் ஊழலை மக்கள் ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்’ என்று, முதல்வர் ஷீலா தீட்சித் சொல்கிறாரே?

கழுகார் பதில்கள்!

'ஊழலை மக்கள் ஒரு பொருட்டாகக் கருதக் கூடாது’ என்று சொல்ல நினைத்து, இப்படிச் சொல்லி இருக்கலாம். ஓரளவு ஊழல், முறைகேட்டில் சிக்காத இவரே இப்படிப் பேச ஆரம்பித்துள்ளார் என்றால், மக்களை அந்தக் கட்சி எப்படி மதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

சுப்புவேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.

கழுகார் பதில்கள்!

நான் பதவி விலகத் தேவை இல்லை’ என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் சொல்வது முறையா?

கழுகார் பதில்கள்!

இவ்வளவுக்குப் பிறகும் அவர் பதவியில் தொடர்வது முறையல்ல!

 பி.ஸ்ரீ.தர்ஷினி, குடந்தை-1.

கழுகார் பதில்கள்!

'கர்நாடக முதல்வர் சித்தராமையா மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளார்’ என்று குற்றம் சாட்டியுள்ளாரே தேவகவுடா மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி?

கழுகார் பதில்கள்!

தேர்தல் அரசியலில் இது ஒன்றும் அதிர்ச்​சிக்குரியது அல்ல. கர்நாடகாவில் பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்கள். இங்கு வெளியில் சொல்ல மாட்டார்கள். எல்லாக் கட்சிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நன்கொடை கொடுத்து​விட்டால், எதுவும் வெளியில் வராதே!

குமாரசாமிகூட தங்கள் கட்சி கவனிக்கப்பட​வில்லை என்ற ஏக்கத்தில் அப்படிச் சொல்லியிருக்​கலாம்!

 எம்.சம்பத்,வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

தமிழகத் தேர்தல் களத்தில் 'சைக்கிள்’ மீண்டும் ஓடுவதற்கான சாத்தியங்கள் குறைந்துவிட்டதா?

கழுகார் பதில்கள்!

நவம்பர் மாதம்தான் அதைத் தீர்மானமாகச் சொல்ல முடியும். 'இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்​மோகன் கலந்துகொள்ளக் கூடாது’ என்று ஜி.கே.வாசன் தொடர்ந்து சொல்கிறார். நவம்பர் மாதம் நடக்கும் அந்த மாநாட்டுக்கு மன்மோகன் சென்றால், ஜி.கே.வாசன் பகிரங்கமாக எதிர்ப்பாரா எனத் தெரிய​வில்லை. அப்போதுதான் சைக்கிள் ஓடுமா அல்லது கைக்குள் அடங்கிவிடுமா எனத் தெரியும்!

சங்கீதா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

கழுகார் பதில்கள்!

தி.மு.க. அமைச்சர்களுக்கும் அ.தி.மு.க. அமைச்சர்​களுக்கும் என்ன வித்தியாசம்?

##~##

அங்கு அய்யாவால் கேள்வி கேட்க முடியாது. இங்கு அம்மாவைக் கேள்வி கேட்க முடியாது!

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

முதலில், தமிழ் செம்மொழி ஆனது. அடுத்து கன்னடம். இப்போது மலையாளம். போகிற போக்கைப் பார்த்தால் எல்லா மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசு அறிவித்துவிடும் போல் இருக்கிறதே?

ஈராயிரம் ஆண்டுகள் பழைமையான மொழி​களைத்தான் செம்மொழித் தகுதி உடையவை என்று முன்பு மத்திய அரசு சொன்னது. ஆனால், அரசியல் காரணங்களுக்கான அந்த ஆண்டுக் கணக்கை குறைத்துவிட்டனர். எனவே, எல்லா மொழிகளும் செம்மொழித் தகுதி உடையதாக அறிவிக்கப்படலாம்.

தமிழைச் செம்மொழி ஆக்குவதற்கே, 100 ஆண்டுகள் சிரமப்பட்டோம். ஆனால் இப்போது, பல மொழிகள் காதும் காதும் வைத்ததுபோல செம்மொழி ஆக்கப்படுகின்றன. எல்லாச் சிரமங்​களும் தமிழுக்குத்தானே!

ஆனால் ஒன்று, எல்லா மொழிகளும் இனிக்கும் மொழிகள்தான். செம்மொழி என அறிவிப்பதுதான்...அரசியல்!

 இல.செ.வெங்கடேஸ்வரன், சத்துவாச்சாரி.

கழுகார் பதில்கள்!

மத்திய அரசும், மாநில அரசும் ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும் முன், மக்களிடமும் வல்லுநர் குழுவிடமும் கருத்து கேட்க மாட்டார்களா?

பெரிய கொள்கை முடிவுகள் எடுக்கும்போது மட்டுமல்ல, குறிப்பிட்ட வட்டாரத்தில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்கும்போதும் அந்த வட்டாரத்து மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அது காலப்போக்கில் சடங்காக மாறிவிட்டது. டி.ஆர்.பாலு சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் தொடங்குவதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு வந்தவர்களை போலீஸே அடித்துத் துவைத்து விரட்டிய காட்சியைப் பார்த்தோம். கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினோம், கலாட்டா செய்துவிட்டனர் என்று கணக்குக் காட்டுவதற்கு நடத்துகிறார்கள். பொதுவாகவே மக்கள் மற்றும் வல்லுநர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். பலதரப்பட்ட யோசனைகள் இதன் மூலமாக முளைக்கும்!

 தி.முகிலன், சிதம்பரம்.

கழுகார் பதில்கள்!

பி.ஜே.பி-யில் இருந்து ராம்ஜெத்மலானி நீக்கப்​பட்டுள்ளாரே?

ராம்ஜெத்மலானிக்கு பி.ஜே.பி. தேவை இல்லை. ஆனால், பி.ஜே.பி-க்கு, ராம்ஜெத்மலானி தேவை!

 ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்!

இலங்கை ராணுவ வீரர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி இல்லை’ என்று சொல்லிவிட்டாரே ஏ.கே.அந்தோனி?

தேர்தல் வரப்போகிறது அல்லவா? அதனால் அடக்கித்தான் வாசிப்பார்கள்!

த.ஜெகன், சரலூர்.

கழுகார் பதில்கள்!

'என் தாயாரைப் போல கட்சியில் ஒழுங்கீனத்தை சகித்துக்கொள்ள மாட்டேன்’ என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பற்றி?

ராகுல் அந்த விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருக்கிறார். அதனால்தான் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், அவர் மீது கடுப்பாக இருக்கிறார்கள்!

 சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

அரசியலில் முடிசூடா மன்னர்கள் யார்?

எப்போதும் மக்கள்தான்!

திருலோக்கி. க.தமிழ்மணி, நெடுந்திடல்.

கழுகார் பதில்கள்!

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க முடியவில்லை. பட்டாசு ஆலைகளைத் தடைசெய்ய அரசு முன்வருமா?

அரசாங்கம் நேர்மையான அதிகாரிகளை அங்கு இறக்கிவிட்டால், நிச்சயம் பட்டாசு ஆலை விபத்துக்களைத் தடுக்கலாம். பட்டாசு தயாரிக்கும் லைசென்ஸ் சரமாரியாகத் தரப்படுகிறது. லைசென்ஸ் வாங்கியவர்கள் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இல்லை. 50 பேர் வேலை பார்க்கும் இடத்தில், 300 பேர் வேலை பார்க்கிறார்கள். திடீரென விபத்து ஏற்பட்டால், நிறையப் பேர் சிக்கிக்கொள்வது இதனால்தான்.

மேலும், ஃபேன்சி ரக பட்டாசு தயாரிப்பு அதிகம் ஆனதில் இருந்துதான் விபத்துக்களும் அதிகம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஃபேன்சி ரக பட்டாசுகளைத் தயாரிக்க 'மணி மருந்து’ என்ற ஒரு கலவை உண்டு. அதை வைத்து காலை 6 முதல் 8 மணிக்குள் மட்டுமே ஃபேன்சி ரக பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும். வெயில் நேரம் என்றால், அது சிறு உராய்வில்கூட வெடித்துவிடும். இந்த மணி மருந்தின் வீரியத்தைக் கட்டுப்படுத்த 'பிஸ்வாஸ்’ என்பதைப் பயன்படுத்த வேண்டும். இதன் விலை அதிகம். எனவே, விலை குறைந்த செந்தூரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதை எல்லாம் அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை. தங்களைக் கவனித்தால் போதும் என்று அலட்சியமாக இருப்பதால்தான் இந்த விபத்துக்கள் நடக்கின்றன.

 பிடல்சேகுவேரா, ராசிபுரம்.

கழுகார் பதில்கள்!

இந்தியா ஜனநாயக நாடு என்று இனியும் சொல்வது சரியாக இருக்குமா?

தவறுகள், கோளாறுகள், முறைகேடுகள் இருந்தாலும் இந்தியா ஜனநாயக நாடு என்ற பெயரை ஓரளவாவது தக்கவைத்துள்ளது. பிற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா இன்னும் மோசமாகிவிடவில்லை.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism