Published:Updated:

டாஸ்மாக் கடையில் ஜெ. படம்

சொன்னதைச் செய்த தே.மு.தி.க.

டாஸ்மாக் கடையில் ஜெ. படம்

சொன்னதைச் செய்த தே.மு.தி.க.

Published:Updated:
##~##

தே.மு.தி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வரிசையாக முதல்வரைச் சந்தித்துவரும் சூழலில், டாஸ்மாக் கடையில் ஜெயலலிதா படத்தை மாட்டி பரபரப்பு கிளப்பியிருக்கிறார் தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர். 

கடந்த சில வாரங்களுக்கு முன், திருப்பூரில் நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, 'அனைத்து அரசுத் திட்டங்களையும் செயல்படுத்தும்போது அவற்றை ஏதோ தானே சொந்தச் செலவில் செய்வதுபோல முதலமைச்சர் காட்டிக்கொள்கிறார். அதனால் அரசின் அனைத்து நலத் திட்டங்களிலும் தனது படம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்கிறார். அப்படியானால் மக்களைக் குடிகாரர்​களாக்கும் டாஸ்மாக் கடைகளிலும் அவர் படத்தை வைக்க வேண்டியதுதானே? நீங்களாக வைக்காவிட்டால், நாங்களே ஒவ்வொரு கடையிலும் முதல்வரின் படத்தை வைப்போம்’ என ஆவேசமாகப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், தே.மு.தி.க-வின் நெல்லைப் பகுதிச் செயலாளர் மகாராஜன் மே 31-ம் தேதி டாஸ்மாக் கடையின் முன்பாக ஜெயலலிதா படத்தை வைத்தேவிட்டார். நெல்லை டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோடீஸ்வரன் நகர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குச் சென்ற அவர், கடையின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகையில், தான் எடுத்துச் சென்ற ஃப்ளெக்ஸ் போர்டைக் கட்டினார்.

டாஸ்மாக் கடையில் ஜெ. படம்

அதில், டாஸ்மாக் என எழுதப்பட்டு, நடுவே இருந்த பாட்டிலில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்று இருந்தது. அதைப் பார்த்து, கடையில் இருந்தவர்களுக்கு குப்பென்று மொத்த போதையும் இறங்காத குறை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவசரமாக அங்கு சென்ற போலீஸார், அந்த பேனரை அப்புறப்படுத்தினர். போலீஸார் ஒருபக்கம் மகாராஜனைப் பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்க, அவரே

டாஸ்மாக் கடையில் ஜெ. படம்

நம்மைத் தொடர்புகொண்டார். ''இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் என அரசு வழங்கும் அனைத்துப் பொருட்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பெரிதாக அச்சிட்டு ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், மக்களை அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்லும் மதுவில் மட்டும் தனது பெயரை விளம்பரப்படுத்தாமல் இருக்கிறார். இதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்'' என்றார்.

மகாராஜனை தே.மு.தி.க-வினர் சிலர் தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டதால், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். கட்சி நிர்வாகிகள் சிலருக்கு போன் செய்த போலீஸார், 'மகாராஜன் உங்கள் பாதுகாப்பில் இருந்தால், எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். மேலிடத்தில் இருந்து நெருக்குதல் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ எனக் கெஞ்சினராம்.

பிறகு ஒருவழியாக மகாராஜனைத் தேடிப் பிடித்து கைதுசெய்தனர் போலீஸார்.  

எல்லா ஊரிலும் தே.மு.தி.க-வினரை இப்படி இறக்கிவிடலாமா என்று யோசித்து வருகிறதாம் தே.மு.தி.க. தலைமை.

அப்படிப் போடு!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism