Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வெள்ளையர்களே கோலோச்சிக்கொண்டு இருந்த கிரிக்கெட் விளையாட்டில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கை ஓங்க ஆரம்பித்தபோது, அதை ஒரு சாதனையாகவே எண்ணிப் பெருமைகொண்டோம். இன்று அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களைப் பார்த்தால், கிரிக்கெட் என்ற விளையாட்டை அழிப்பதற்காகவே நம்மவர்கள் அரவணைத்ததுபோல் இருக்கிறது. அந்த அளவுக்கு, சூதாட்டம் - பெண் பித்து - மது மயக்கம் என்று சகல சீரழிவுகளிலும் கிரிக்கெட்டைச் சிக்கவைத்திருக்கிறது இந்திய வாரியம். இச்சைக்கு ஏற்பப் பச்சை நோட்டுகளைக் குவிக்கலாம் என்று தெரிந்த பிறகு, அரசியல் புகாமல் இருக்குமா என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏதோ ஒரு சீனிவாசன் விலகிவிட்டாலே கிரிக்கெட் வாரியம் சுத்தமாகிவிடும் என்றரீதியில் கிளம்பும் குரல்களைக் கவனித்தால், அதன் பின்னாலும் அரசியல் இருப்பது புரியும். இடம் காலியானால், மடம் சொந்தமாகும். அதை வைத்து அதே 'விளையாட்டை'த் தாங்களும் தொடரலாம் என்ற பேராசையின் அடிப்படையிலேயே காய் நகர்த்துகிறார்கள் சிலர். கிரிக்கெட் வாரியத் தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்றும், 'ஃபிக்ஸிங்' சூதாட்டத்தில் வீரர்கள் புகுந்து விளையாடினார்கள் என்றும் இன்று நேற்றா குற்றச்சாட்டு எழுகிறது? திறமைமிக்க இளைஞர்களை எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல், ஊக்குவித்தும் பயிற்றுவித்தும் அவர்களை உலகறிய வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டிய கிரிக்கெட் வாரியத்தைத் தங்கள் சுயநலத்துக்குப் பணயம் வைத்து, தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளத்தான் எல்லாப் பெரிய மனிதர்களுமே இதுவரை பாடுபட்டு இருக்கிறார்கள். கேள்வி கேட்கவே வழியில்லாதபடி, அடுக்கடுக்கான தனியார் அதிகார மையங்களால் உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் கனவு மாளிகையில், ஒன்றிரண்டு ஓட்டை மட்டுமே விழுந்திருந்தால் கண்டுபிடித்து அடைக்கலாம். ஆனால், பூசுகிற சிமென்ட்டில் தொடங்கி ஒவ்வொரு கல்லுமே அல்லவா இங்கே உளுத்துக்கிடக்கிறது!

இந்த உண்மை தெரிந்த பிறகும் பூசி மெழுகும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தால்... கிரிக்கெட் மீதான அப்பாவிகளின் காதல் நிச்சயம் விரைவில் மண்ணோடு மண்ணாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism