Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
##~##

என்.காளிதாஸ், அண்ணாமலை நகர்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்று, அமைச்சர் ஏ.கே.அந்தோணி சொல்கிறாரே?

ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்பது உண்மைதான். ஆனால், சீனப் பிரச்னை 1962-ல் இருந்து இருக்கிறது. என்ன செய்து​கொண்டு இருந்தோம்? இந்த 50 ஆண்டுகள் எதுவும் செய்யாதவர்களால் இனி என்னதான் செய்துவிட முடியும்?

 டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

கழுகார் பதில்கள்!

கருணாநிதியின் 'குடும்ப அரசியல்’, ஜெயலலிதாவின் 'உள்குடும்ப அரசியல்’- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

சசிகலாவின் குடும்பத்தினரை ஜெயலலிதாவின் 'உள்குடும்பம்’ என்று நீங்கள் சொல்வதாக நினைக்கிறேன்.

கருணாநிதியின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினாலும் நேரடியாகக் களத்துக்கு வருகிறார்கள். அதனால் லாபங்களும் உண்டு. சிரமங்களையும் அனுபவிக்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!

ஆனால், சசிகலா குடும்பத்தினர் மறைமுகமாக அதிகாரம் செலுத்துவதன் மூலமாக லாபம் அடைவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். இதுதான் அதிக ஆபத்தானது.

இப்போது இந்தத் தரப்பினரை ஜெயலலிதா களையெடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பும் அதைச் செய்தார். ஆனால், எத்தனை தடவை இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் அவர்களிடம் நம்பி ஏமாறுபவர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள்.

 எஸ்.எஸ். வசந்தகுமார், கோவை.

கழுகார் பதில்கள்!

இந்தியாவை ஆக்கிரமிக்கப் பயன்படுத்தப்பட்ட அதிகாரிகள் லண்டன் போனதும் விசாரணைக் கமிஷன் அமைத்து தண்டிக்கப்​பட்டார்களாமே?

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நிர்மாணித்த ராபர்ட் கிளைவ், அதை அதிகாரம் பொருந்தியதாக மாற்றிய வாரன் ஹேஸ்டிங்க்ஸ் ஆகிய இருவரும் அத்தகைய நடவடிக்கைக்கு உள்ளானார்கள். பிளாசிப் போரிலும் பியூக்ஸர் போரிலும் வெற்றியைக் குவித்த ராபர்ட் கிளைவ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 'என்னை ஒரு ஆடு திருடியவனைப் போல நடத்துகிறீர்களே?’ என்று கேட்டார். 'ராபர்ட் கிளைவ், எல்லாத் தவறுகளுக்கும் உற்பத்தி இடம். அனைத்துக் கொள்ளைகளுக்கும் மூலம்’ என்று நாடாளு​மன்ற வாதங்களின் அறிஞர் பாக்ஸ் எழுதினார்.

வாரன் ஹேஸ்டிங்கஸ் பற்றிப் பேசிய எட்மண்ட் பர்க், 'புகழ்மிக்க பிரிட்டனின் பொதுமக்கள் அவையின் பெயரால், அதற்​குத் துரோகம் இழைத்தவர்’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த வரலாற்றுச் சம்பவம் எதை உணர்த்துகிறது தெரியுமா? நீ இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை காப்பாற்று​வதற்கு உதவி செய்தவனாக இருக்கலாம், ஆனால் ஊழல் முறைகேடுகள் செய்தால், நிச்சயம் தண்டிக்கப்படுவாய் என்பதுதான். 'நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடிய கட்சி’ என்று சொல்லிக்கொண்டு, முறைகேடுகளை இங்கும் சிலர் செய்கிறார்கள். முன்னோர்கள் தியாகிகள் என்பதால், இப்போது உள்ளவர்கள் திருடுவதற்கான லைசென்ஸ் தரப்படுவது இல்லை.

 கோ.பாஸ்கர், இளங்கார்குடி.

கழுகார் பதில்கள்!

எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது திருக்குறள் என்பார்கள். இன்றைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொருந்தும் குறள்கள் என்ன?

முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் - இது மத்திய அரசுக்கு.  

அறமுறை தவறி ஆட்சியாளர்கள் செயல்பட்டால், அவர்களது ஆட்சியில் பருவமழை கூட முறையாகப் பெய்யாது என்கிறார் வள்ளுவர். நாட்டில் ஏன் மழை பெய்யவில்லை என்பது தெரிகிறதா?

'இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானும் கெடும்’ - இது மாநில அரசுக்கு. தான் தவறு செய்யும்போது கண்டித்துத் திருத்தும் சான்றோரின் நட்பைப் பாதுகாப்பாகக்கொள்ளாத மன்னன், பகைவரே இல்லாவிட்டாலும் பகையாகிக் கெடுவான் என்பதுதான் இந்த குறளுக்கு விளக்கம்.

 ஈசன் எழில்விழியன், சேலம்-3.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

'மாநில முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப்களாக மத்திய அரசு நினைக்கிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருப்பது பற்றி?

மத்தியில் காங்கிரஸ் மட்டுமல்ல... எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநிலங்களை ஏளனமாகவும் மாநில முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப்களாகவும்தான் மதிக்கிறது.

'இந்திய அரசிய​லமைப்புச் சட்டத்தின்படி அமையும் மாநிலங்கள் எஞ்சிய அதிகாரங்களுடன் சுயாட்சி​கொண்டதாக விளங்கும். மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் நீங்கலாக, பிற எல்லா அதிகாரங்களையும் பணிகளையும் நிர்வாகங்களையும் இந்த மாநிலங்கள் பெற்றிருக்கும்’ என்று இந்திய அரசியலமைப்புச் சபையில் (1946 டிசம்பர்13) ஜவஹர்லால் நேரு சொன்னார். ஆனால், விடுதலைக்குப் பிறகு மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்துவிட்டனர். அதைத்தான் ஜெயலலிதா இப்போது சொல்கிறார்.

இந்த ஓரவஞ்சனை குறித்து எத்தனையோ ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்கள். தமிழில் கோபி​செட்டிபாளையம் கு.ச.ஆனந்தன், முரசொலி மாறன், ஆலடி அருணா ஆகியோர் பல நூறு பக்கங்கள் கொண்ட புத்தகங்களைத் தீட்டியுள்ளனர்.

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவது ஆண்டுதோறும் குறைந்து​வருவதாக ஆய்வுகள் சொல்​கிறதே?

இருக்கலாம். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாண​வர்கள் வாங்கும் மதிப்​பெண்கள்ஆண்டு​தோறும் அதிகமாகிக்​கொண்​டே போகிறது. அர​சாங்கம் இதன் உள்​கட்டமைப்பு வசதிகளை மட்டும் மேம்படுத்திக் கொடுத்தால், தனியார் பள்ளிகளைவிட ஏற்றம் பெறும்.

 அ.யாழினி பர்வதம், சென்னை-78.

கழுகார் பதில்கள்!

எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களுக்கு இந்திய அரசு அபராதம் விதிக்கப்போகிறதாமே?

வேலி தாண்டிய கிளைகளை

வெட்டும் தோட்டக்காரனே;

மண்ணுக்கு அடியில் செல்லும்

வேர்களை என்ன செய்வாய்?- என்று ஒரு கவிதை உண்டு. வயிற்றுப் பிழைப்புக்காக கடலில் இறங்கும்போது, தவறுதலாக எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களைத் தண்டிக்கிறார்கள். மீன்களை என்ன செய்வதாக உத்தேசம்?

 இல.செ.வெங்கடேஸ்வரன், சத்துவாச்சாரி.

கழுகார் பதில்கள்!

தமிழ்நாட்டின் வரம் என்ன? சாபம் என்ன?

உன்னதமான தலைவர்களை ஒரு காலத்தில் பெற்றிருந்ததுதான் நம்முடைய வரம். அவர்களைப் போன்றவர்கள் இன்று இல்லாமல்போனதுதான் சாபம்.

 ரேவதிப்ரியன், ஈரோடு-1.

கழுகார் பதில்கள்!

காய்கறி விலை உயர்வுக்கும் மத்திய அரசுதான் காரணமா?

ஆமாம்! காய்கறி விலையை பெட்ரோல், டீசல்தானே தீர்மானிக்கிறது?!

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

1987-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 13 எ சட்டப்பிரிவை அமல்படுத்த இயலாது என்று இப்போது சொல்கிறதே இலங்கை?

'அமல்படுத்துவோம்’ என்று எப்போது சொன்னது இலங்கை?

 ச.அ.மங்கை, மதுரை.

கழுகார் பதில்கள்!

ஆதரவை வாபஸ் பெறாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்கு சம்மன் வந்திருக்காதோ?

2ஜி வழக்கில் தயாளு அம்மாள் ஒரு சாட்சி. அவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தாக வேண்டும். எனவே, இதில் அரசியல் இல்லை.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism