Published:Updated:

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

Published:Updated:
மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்
##~##

தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் சென்னையில் வியாழக்​கிழமை மதியம் ஜில்லுன்னு மழை. நனைத்து வந்த கழுகார் சிறகுகளைச் சிலிப்பியபடி செய்திகளைப் பாய்ச்ச ஆரம்பித்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்ன... கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து​விட்டதா?'' என்று கேட்டுவைத்தோம். அதற்கும் சில தகவல்களைத் தயாராக வைத்திருந்தார்.

''கருணாநிதி நடத்திய பிறந்த நாளை ஒட்டியே சிலர் சர்ச்சையைக் கிளப்பி​யிருக்கிறார்கள். 'கருணாநிதி பிறந்தது 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி. இதன்படிப் பார்த்தால் 2014 ஜூன் 3-ம் தேதிதான் 90-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். இது 89-வது பிறந்த நாள்தானே’ என்று சிலர் சிக்கலைக் கிளப்புகிறார்கள்.''

''இதற்கு தி.மு.க. தரப்பு ரியாக்ஷன் என்ன?''

''தி.மு.க-வினர், 'வருஷம் தொடங்கும்போது சிலர் பிறந்த நாள் கொண்டாடுவார்கள். சிலர் முடியும்​போது கொண்டாடுவார்கள். இது தேவைஇல்லாத சர்ச்சை. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை’ என்கின்றனர். கருணாநிதியோ, 'என் மனதாலும் செயலாலும் தொடர்ந்து உழைப்பேன்... உழைப்பேன்... தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன்’ என்று அவர் உற்சாகமாக எழுத ஆரம்பித்துவிட்டார். தலைவர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்போகிறார் என்ற பரபரப்​புக்கு கருணாநிதி முற்றுப்புள்ளி வைப்பதுபோல இருக்கிறது இந்தப் பேச்சுக்கள்!''

''ம்!''

''கருணாநிதி கேக் வெட்டுவதில் ஏற்பட்ட தாமதம் பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொன்னேன். கருணாநிதிக்கு கொடுக்க மஞ்சள் சால்வையுடன் குஷ்பு வந்தார். அதை அவர் கருணா​நிதியின் கையில் கொடுக்க முயல... அருகில் இருந்த குடும்பப் பிரமுகர் ஒருவர், 'போர்த்தி விடுங்க’ என்று சொன்னாராம். இது இளைய தலைவர் குடும்பத்துப் பெண்மணியை கொந்தளிக்க வைத்ததாம். 'அவங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பாங்கனு பார்த்தா... அந்தப் பொம்பளைக்கு சப்போர்ட் பண்றாங்க. யாருக்குமே இது அசிங்கமா படலையா?’ என்றாராம்.''

''நீர் சொன்னது மாதிரி குஷ்பு புயல் ஓயாதுபோல!''

''அணி - பிணி பற்றி கருணாநிதி பேசியது பற்றிச் சொல்லியிருந்தேன். மதுரையை வைத்துத்தான் அவருக்கு இந்தக் கவலை என்றும், மதுரையில் நடக்கும் நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் ஸ்டாலினும் அழகிரியும் ஒரே மேடைக்கு வர வேண்டும் என்று கருணாநிதி நினைப்பதாகவும் அதில் சொல்லியிருந்தேன். 5-ம் தேதி நடந்த கூட்டம் பற்றி உமது நிருபர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் ஒரே ஒரு தகவலை மட்டும் நான் தருகிறேன். 4-ம் தேதி மதுரைக்கு வந்துவிட்டார் அழகிரி. தன்னை ஸ்டாலின் அழைப்பார் என்று காத்திருந்தார். ஆனால், ஸ்டாலின் அழைக்கவில்லை. 'இந்தக் கூட்டத்துக்கு அழகிரியை நீங்கள் அழைத்தால், அவர் அரசியலில் மறுபடியும் தீவிரம் ஆவார். அழைக்கவில்லை என்றால், அதோடு அவர் அமுங்கிவிடுவார்’ என்றார்களாம் அவரது ஆதரவாளர்கள். ஸ்டாலினும் அழைக்கவில்லை. அழகிரியும் வரவில்லை. மதுரையில் அழகிரி இல்லாமல் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திக் காட்டிவிட்டனர். இதன்படி பார்த்தால், அழகிரியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் ஒருமாதிரியாக முடிவுக்கு வருகிறது என்றே சொல்ல வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினார் கழுகார்.

''மாநிலங்கள்அவைத் தேர்தல் ஜூன் 27-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள் கட்சிகளில் ஏராளமான கூத்துக்கள் நடக்க ஆரம்பித்து​விட்டன.''

''ஒவ்வொரு கட்சியாகச் சொல்லும்!''

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

''முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடப்பதைச் சொல்கிறேன். இப்போது ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் டி.ராஜாவா அல்லது தா.பாண்டியனா என்பதே அங்கு பிரச்னை. தா.பாண்டியனுக்கு கட்சியின் நிர்வாகக் குழுவில் ஆதரவு இல்லை என்பதைக் கடந்த இதழிலிலேயே உமக்குச் சொன்னேன். 'என்னை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும் சந்தித்தனர். நீங்கள் தேர்தலில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் சொன்னதாகச் கூறினர். நான் எம்.பி. ஆனால்தான் 40 தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்குப் போக முடியும் என்பதால் முதல்வர் இப்படி நினைத்திருக்கலாம்’ என்று தா.பாண்டியன் பேசியதாகவும், அதற்கு கடுமையான எதிர்ப்பு கட்சிக்குள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 'நாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கொடுங்கள் என்றுதான் கேட்க முடியும். தா.பாண்டியனுக்குத்தான் தருவோம் என்று யாரும் வேட்பாளரைத் திணிக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தலிலில் நம்முடைய நிலைப்பாடு என்ன என்பதை அப்போதுதான் முடிவெடுக்க முடியும். அதற்கு முன்பே தேர்தலுக்குப் பிரசாரம் போவதைப் பற்றி ஒரு மாநிலச் செயலாளர் தனிப்பட்ட முறையில் எப்படி முடிவெடுக்கலாம்?’ என்று பலரும் எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்கள். மூத்த தலைவர்கள் முதல் எம்.எல்.ஏ-க்கள் வரை பலரும் இதை வழிமொழிந்துள்ளனர்.''

''என்ன முடிவு எடுத்தார்களாம்?''

''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை அ.தி.மு.க-விடம் கேட்பது என்று முடிவுசெய்துள்​ளனர். அதற்கான பேச்சுவார்த்தை நடத்த ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற விருப்பமில்லை என்று தா.பா. சொன்னாராம். 'நானே வேட்பாளராக இருக்கும்போது, அந்தக் கமிட்டியில் இடம்பெறக் கூடாது’ என்றாராம். 'வேட்பாளர் யார் என்பதை அப்புறம் பார்ப்போம். முதலில் ஸீட்தான் கேட்கப்போகிறோம்’ என்று குரல்கள் வந்ததாம். இதனால் விழிபிதுங்கி நிற்கிறாராம் தா.பா. இதற்கான பேச்சுவார்த்தைக்காக 7-ம் தேதி டெல்லியில் இருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களான பரதனும் சுதாகர் ரெட்டியும் வருகிறார்கள்!''

''ஜெயலலிதா என்ன நினைக்கிறாராம்?''

''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கே கொடுக்காமல், அந்த ஒரு இடத்திலும் அ.தி.மு.க-வே வேட்பாளரையே அறிவித்துவிட்டால் என்ன ஆகும்?''

''என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்?''

''அரசியலில் எதுவும் நடக்கலாம் அல்லவா? டி.ராஜாவா தா.பாண்டியனா என்று அந்தக் கட்சி​யில் முட்டல் நடந்துவரும் நிலையில் சமாதானம் ஆகவில்லை என்றால், ஜெயலலிதா இதுவும் செய்யலாம் அல்லவா? அவரிடம் நான்கு எம்.பி-க்கள் வெற்றிபெற இருக்கும் வாக்குகள் போக மீதி 15 வாக்குகள் இருக்கின்றன. அவருக்கு இன்னும் 19 வாக்குகள் கிடைத்தால், ஐந்து எம்.பி. ஸீட்டையும் அ.தி.மு.க-காரர் ஒருவருக்கே அவர் தரலாம். அதற்கான முயற்சியில் அவர் இறங்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர்.''

''அப்படியெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாதே?''

''புதுக்கோட்டை கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. இறந்தபோது தங்கள் கட்சிக்கே மீண்டும் அந்தத் தொகுதி கிடைக்கும் என்று நம்பினர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர். ஆனால், ஜெயலலிதா இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரை அறிவித்தார். அதேபோன்ற ஒரு நிலை இப்போது உருவாகலாம் என்கிறார்கள். 'கம்யூனிஸ்ட் கட்சியின் பரதனும் டி.ராஜாவும், ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டு ஒரு மாதமாகியும் இன்னும் கிடைக்கவில்லை. அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டியும் சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கிறார். அதற்கும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை’ என்று இவர்கள் சொல்கிறார்கள்.''

''அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எதுவும் நடக் கலாம்!''

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

''அ.தி.மு.க-வில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்கு ஆளுக்கு ஆள் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். 'அம்மா எனக்கு ஸீட் ஒதுக்குங்கள்’ எனக் கேட்டு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் அப்ளிகேஷன் போட்டிருக்கிறார்கள். இதில் ரத்தத்தின் ரத்தங்களைவிட ரிட்டையர்ட் ஆன அதிகாரிகள்தான் அதிகம். இதுதவிர கார்டனுக்கு நெருக்கமான தொழில் அதிபதிகள், நீதித் துறை பிரமுகர்கள், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் சிலரும் மனு போட்டிருக்கிறார்கள். கட்சிப் பிரமுகர்களைப் பொறுத்தவரை முன்னாள் சபாநாயகர் வரகூர் அருணாசலம், நடிகர் ஆனந்த் ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கோ.சமரசம், பி.ஆர்.சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், துரைராஜ், ராமச்சந்திரன், பேச்சாளர்களில் ஆவடி குமார், போளூர் கோவிந்தன் போன்றவர்களும் மனு போட்டிருக்கிறார்களாம்.''

''ஓஹோ!''

''ஜெயலலிதாவின் முகத்தில் பட்டுவிட்டால் போதும் என கார்டன் வாசலில் சிலர் ஆஜர் ஆகிறார்கள். சமீப காலமாக பிறந்த நாள், திருமண நாள், குழந்தைக்குப் பெயர் சூட்டல், கட்சிக்கு நிதி என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் ஜெயலலிதாவின் அப்பாய்ன்ட்மென்ட் கேட்டிருக்​கிறார்கள் பலர். அப்படி ஜெயலலிதாவின் தரிசனம் கிடைத்தால் பார்லிமென்ட்டைப் பார்த்துவிட வாய்ப்பு கிடைக்குமே என்று துடிக்கிறார்கள். மலைச்சாமி, டி.டி.வி.தினகரன், நாஞ்சில் சம்பத், மதுசூதனன், பதர் சயீத், திருவாரூர் அசோகன், இளமதி சுப்பிரமணியன், அன்வர்ராஜா, துரை கோவிந்தராஜன், கு.தங்கமுத்து, மைத்ரேயன் என்று பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. அனைவரும் வைத்திருக்கும் பட்டியலில் ஆவடிகுமார், தமிழ்மகன் உசேன், தங்கமுத்து, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் ஆகிய நால்வர் பெயர் மட்டும் விடுபடாமல் இடம்பெறுகின்றன.''

''சரி... தே.மு.தி.க. வட்டாரத்துக்கு வாரும்!''

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

''தே.மு.தி.க-வைப் பற்றி தி.மு.க. எம்.பி. ஒருவர்அடித்த கமென்ட்டை முதலில் சொல்லி​விடுகிறேன். 'விஜயகாந்துக்கு தினமும் எப்படி பொழுது போகுதுன்னே தெரியலை. ஒண்ணு... நாங்க ஆதரவு கேட்கிறதுக்கு பதில் சொல்லணும். இல்லைன்னா அவரு எங்ககிட்ட ஆதரவு கேட்டாவது போன் பண்ணணும். எதையும் செய்யாமல் ஒரு மனுஷனால் எப்படிச் சும்மா இருக்க முடியும்னே தெரியல’ என்றாராம். 'நாங்கள் கனிமொழியை நிறுத்துகிறோம். நீங்கள் ஆதரவு தாருங்கள்’ என்று தி.மு.க. தரப்பில் இருந்து சொல்லிவிட்டார்களாம். விஜயகாந்திடம் இருந்து எந்த பதிலும் இல்லையாம்.''

''ஒருவேளை முடிவு எடுத்திருக்க மாட்டாரோ என்னவோ?''

''ராஜ்யசபா தேர்தலில் என்ன முடிவு எடுக்கலாம் என்று எம்.எல்.ஏ-க்களிடம் கருத்துக் கேட்பதற்கான கூட்டம் நடத்த இரண்டு நாட்களுக்கு முன் திட்ட​மிட்டாராம் விஜயகாந்த். 'அவங்களை எல்லாம் கூப்பிட்டா... ஆள் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்வாங்க. அதனால் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என் றும் சொல்லப்பட்டதாம். அதனால் விஜயகாந்த், பிரேமலதா, பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்ளிட்ட இன்னும் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டிலேயே 'கிச்சன் செயற்குழு’ கூடியிருக்கிறது. 'கருணாநிதி ஆதரவு கேட்கிறாரு. கொடுக்கலாம்’ என்ற தொனியில் விஜயகாந்த் சொன்னாராம். ஆனால்,  அதைக் கடுமையாக எதிர்த்தாராம் பிரேமலதா. 'இப்போது கருணாநிதியிடம் வலியப்போய் மாட்டிக்கொண்டால், அடுத்து நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி நாம் கேட்கும் தொகுதிகளைத் தரமாட்டார். நம்மைக் கெஞ்சவிடுவார். அவரிடம் கெஞ்சி நாம் அரசியல் நடத்தத் தேவைஇல்லை. ஒரு தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்தோம்... இன்னொரு தேர்தலில் கருணாநிதி அணியில் இருந்தோம் என்றால், நமக்கான மரியாதையே போய்விடும். அதனால் நம் தலைமையில் ஒரு அணியை ஆரம்பிப்போம்’ என்று சொன்னாராம் பிரேமலதா!''

''விஜயகாந்த் என்ன சொன்னாராம்?''

''சொன்னதைக் கேட்டுக்கொண்டார். கருணா நிதியின் வேட்பாளரை ஆதரிப்பது, தன்னுடைய வேட்பாளருக்கு கருணாநிதியின் ஆதரவைக் கேட்டு வாங்குவது... எதைச் செய்தாலும் அது விஜயகாந்தின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்து என்று பிரேமலதா நினைக்கிறாராம்!''

''என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். யாருக்காவது வாக்களிக்க வேண்டுமே?''

''குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வேட்பாளர், ஜெயலலிதா வேட்பாளர் என இரண்டுக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்ததைப்போல இதற்கும் செய்தால் என்ன என்று நினைக்கிறாராம்!'' என்று சொல்லிச் சிறிது இடைவெளிவிட்டு ஆரம்பித்தார் கழுகார்.

''பி.ஹெச்.பாண்டியனுக்கு நெருக்கடி ஏற்பட் டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. அதற்குக் காரணம் அவரது மனைவி சிந்தியா பாண்டியன்!''

''அவர் தனது அரசுப் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே?''

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வீட்டில் சீக்ரெட் மீட்டிங்

''பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனை தமிழ்நாடு உயர் கல்வி மன்றத் துணைத் தலைவராக கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். அவர் பிறப்பித்த ஒரு ஆணை அவரது பதவியையே காவுவாங்கிவிட்டது. 'கல்லூரிகளில் நடக்கும் உள்தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்’ என்று உத்தரவிட்டது அவர்தான். 'இந்த உத்தரவு எனக்குத் தெரியாமல் வெளியானது’ என்று முதல்வர் அறிவித்ததும், அவர் தலை உருளும் என்று நினைத்தனர். இந்த நிலையில்தான் அவர் ராஜினாமா செய்துவிட்டார். 'உயர் கல்வி மன்றத் தலைவராக உள்ள உயர் கல்வித் துறை அமைச்சர், கல்லூரிக் கல்வி இயக்குநர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திதான் இப்படிப்பட்ட கொள்கை முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதைச் செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து அறிவித்ததுதான் ராஜினாமாவின் பின்னணி’ என்கிறார்கள். அத்துடன் கடந்த மார்ச் 29-ம் தேதி தனது 68-வது பிறந்த நாளை பி.ஹெச்.பாண்டியன் கொண்டாடினாராம். அப்போது அவரது ஆதரவாளர்கள் ஆர்வக்கோளாறில், 'அடுத்த முதல்வரே...’ என்று பி.ஹெச்.பாண்டியனை விளித்துப் போஸ்டர் அடித்து நெல்லை முழுவதும் ஒட்டிய தகவலும் தலைமைக்குப் போயிருக்கிறது. இதுவும் அவருக்குத் தலைவலி ஆகலாம் என் கிறார்கள்!''

''சரி... கைதான டாக்டர் வெங்கடேஷ் சிறையில் எப்படி இருக்கிறாராம்?''

''சரியாகச் சாப்பிடாமல் நொந்துபோய் இருக்கிறார். 'எனக்காக யாரும் ஃபெயில் கூட போடக் கூடாது’ என்று சொல்லிவிட்டாராம். வெங்கடேஷ் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவர் சமீபத்தில்  விசாரிக்கப்பட்டுள்ளார். தான் அமைச்சராக இருந்தபோது டாக்டர் வெங்கடேஷிடம் தந்ததாக சில விவரங்களைச் சொல்லியிருக்கிறார். அந்த விவரங்கள் மலைக்கும் அளவுக்கு இருந்ததாம். மேலும், கிரானைட் அதிபர் ஒருவர் ஏதோ சில ஆசை வார்த்தைகளை வெங்கடேஷிடம் சொன்னதாகவும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் அவரைக் கம்பி எண்ண வைத்துள்ளது'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

 முழுவதும் வாசித்த முனுசாமி!

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரகம் கூட்டியிருந்தது. '10 நிமிடங்களில் 10 பிரச்னைகளைப் பேச முடியாது’ என்று, டெல்லி கூட்டத் தைத் தவிர்த்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர்கள் எல்லோரும் தங்கள் விருப்பப்பட்ட நேரத்துக்குட்பட்டு பேசி விவாதித்தனர். ஜெயலலிதா சார்பில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு முதல்வரின் முழு உரையையும் வாசிக்க அனுமதிக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism