Published:Updated:

பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை கண்காணிக்கப்படுகிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

புதுடெல்லி:

பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை கண்காணிக்கப்படுகிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

ன்லைன் சில்லரை  வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைகளை மத்திய அரசு கண்காணித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் .

கடந்த 6ஆம்  தேதி அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்து நாடே அதிசயிக்கும் வகையில் ஒரே நாளில் 600 கோடி ரூபாய்க்கு (10 கோடி டாலர்) பல்வேறு பொருள்களை  ஆன் லைன் மூலம் விற்பனை செய்தது. சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி உள்ளனர்.

பிளிப்கார்ட்டின் அசுர விற்பனையைத் தொடர்ந்து  அமேசான் நிறுவனமும்  இன்று முதல் விழாக்  கால அதிரடி தள்ளுபடி விற்பனையைத்  தொடங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த வணிகத் தந்திரத்தால் நாடு முழுவதும்,  நேரடி விற்பனையில் ஈடுபட்டு வரும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய விற்பனை நிறுவனங்கள்   திகைத்துப் போயுள்ளன. இதனையடுத்து   மத்திய அரசுக்கு  பாதிக்கப்பட்டு உள்ள நிறுவனங்கள், மத்திய அரசிடம்   புகார் மேல் புகார் செய்து வருகின்றன.

இந்நிலையில், பொது விற்பனையாளர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின்னணு வர்த்தகம் தொடர்பான அரசுக் கொள்கையைத்  தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பது குறித்தும் விரைவில்  ஆலோசிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு