Published:Updated:

ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் திரண்டனர்!

பெங்களூர்: ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் இன்று திரண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பெங்களூர் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பு ஏராளமான கூட்டம் கூடியது. அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிறை முன்பு கூடி இருந்தனர்.

என் அனுமதியின்றி என்னை பார்க்க யாரையும் அனுப்ப வேண்டாம் என்று சிறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, அவரை பார்க்க செல்பவர்கள் சிறை அதிகாரிகளிடம் துண்டு சீட்டை கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று ஜெயலலிதா மறுத்துவிட்டார். இதனால், ஜெயலலிதாவை பார்க்க யாரையும் சிறைக்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.