Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ங்கள் கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பி.ஜே.பி. தேர்ந்தெடுத்திருக்கிறது. மோடிக்கு எதிராக அத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி - 'பாரதிய ஜகடா பரிவார்' (பாரதிய சண்டைக் குடும்பம்) என்று கிண்டல் அடித்திருக்கிறது காங்கிரஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுதந்திர இந்தியாவின் அதிகார சக்தியாக காங்கிரஸ் தோன்றியபோது, அங்கே நேருவுக்கும் பட்டேலுக்கும் நடக்காத சண்டையா? கலகம் பிறந்ததால் திருப்புமுனையைச் சந்தித்த கட்சிகளின் சரித்திரம் இங்கே ஏராளம். மாறாக, எதிர்க் கேள்விக்கே வழியில்லாமல், ஒட்டுமொத்தக் கட்சியும் ஒரு குடும்பத்தின் சர்வாதிகார முடிவுக்குக் கீழ்ப்படிந்துபோவதுதான் ஜனநாயக முரண்பாடு!  

ரயிலில் உயிர்கள் அநியாயமாக எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோத்ராவில் வெடித்த கொடூர கலவரத்தை மனிதத்தன்மைகொண்ட யாரும் இன்றும் நியாயப்படுத்திவிட முடியாது. அதே சமயம், அந்தக் கலவரத்தைக் காரணம் சொல்லியே, கடந்த ஒன்பதாண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் களங்கங்களைத் திரை போட்டு மறைக்கவும் முடியாது!

இமயம் முதல் குமரி வரையிலான கட்சியின் மாநிலக் கிளைகளில் ஜனநாயகக் கிளைக்குத் துளியும் இடம் கொடுக்காமல், மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அடிமட்டத் தொண்டனின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்காமல் செயல்படும் தங்கள் கட்சியின் 'டிப்ளமேட்டிக்' ஜனநாயகத்தின் பக்கம் காங்கிரஸ் தலைவர்கள் பார்வையைத் திருப்பட்டும்!  

குடும்ப ஆட்சியின் சர்வாதிகார நிர்வாகம் நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைக் கடந்த சில ஆண்டுகளில் பலமாகவே உணர்ந்துவிட்டார்கள் பாவப்பட்ட இந்திய மக்கள். எனவே, எதிர் அணியின் 'வேதனை'யைப் பட்டியல் போடுவதைவிடவும், தேர்தல் களத்தில் எடுத்துச் சொல்வதற்குத் தன்னிடம் 'சாதனை' ஏதேனும் இருக்கிறதா என்று சரிபார்ப்பதே காங்கிரஸின் எதிர்காலத்துக்கு நல்லது!