Published:Updated:

மோடியை துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது: திக்விஜய் சிங் தாக்கு!

மோடியை துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது: திக்விஜய் சிங் தாக்கு!
மோடியை துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது: திக்விஜய் சிங் தாக்கு!
மோடியை துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது: திக்விஜய் சிங் தாக்கு!

யாவத்மால்: மோடியை துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது என்று திக்விஜய் சிங் தாக்கி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் யாவத்மாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நாட்டில் 3 சித்தாத்தங்கள் உள்ளன. ஒன்று, காந்தி-நேரு-அம்பேத்கர் சித்தாந்தம். 2வது, இடதுசாரி சித்தாந்தம். 3வது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் சித்தாந்தம். மத அடிப்படையில், நாட்டில் பிளவு ஏற்படுத்துவதில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் சிறந்தவர்கள்.

பா.ஜ.க. மதக் கலவரத்தை தூண்டிவிடுகிறது. முசாஃபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கௌரவிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஊழல்வாதிகளை ஆதரிக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், குஜராத்தில் உள்ள ஊழல் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில், நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என மோடி கூறுகிறார். ஆனால், தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தியாவை முன்னேறி வரும் நாடு என அவர் கூறுகிறார். அவரது அரசு பதவியேற்ற பிறகுதான், இந்தியா முன்னேறி வரும் நாடானதா?

நாட்டிலேயே அனைத்து மாநிலங்களையும்விட முன்னேறிய மாநிலம் குஜராத் என்றும், மகாராஷ்டிரம் பின்தங்கியுள்ளதாகவும் மோடி திரும்ப திரும்பத் தெரிவிக்கிறார். ஆனால் வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களோ அனைத்துத் துறைகளிலும் மகாராஷ்டிரம் முதலாவது மாநிலமாக இருப்பதாகவும், குஜராத் பின்தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் மோடி அரசியல் செய்வது, கடும் கண்டனத்துக்குரியது. எல்லையில் பாதுகாப்பை ஸ்திரமாக வைத்திருப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியைத் துதிபாடுவது, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது" என்றார்.