Published:Updated:

புயல் சேதங்களை பார்வையிட நாளை விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் மோடி!

புயல் சேதங்களை பார்வையிட நாளை விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் மோடி!
புயல் சேதங்களை பார்வையிட நாளை விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் மோடி!

புதுடெல்லி: புயலால் பாதிக்கப்பட்ட  இடங்களை பார்வையிடுவதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை செல்கிறார்.
 

புயல் சேதங்களை பார்வையிட நாளை விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் மோடி!

ஹூட்ஹூட் புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. புயல், மழையால் விசாகப்பட்டினம் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார கம்பங்களும், ரயில் பாதைகளில் உள்ள மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன. விசாகப்பட்டினம் விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை விசாகப்பட்டினம் செல்லும் பிரதமர் நரேந்திர மேடி, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடுகிறார்.