Published:Updated:

புயல் நிவாரணத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி: பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

விகடன் விமர்சனக்குழு

நகரி: ஆந்திராவை தாக்கிய ஹூட் ஹூட் புயலால் மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,  நிவாரண உதவியாக ரூ.2000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

புயல் தாக்கிய உடன் பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக ஆந்திர முதல்வர்   சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.

இதேபோல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார்.

அவர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறும்போது, ‘‘ஆந்திராவை தாக்கிய ‘ஹூட் ஹூட்’ புயல் சேதத்தை தேசிய, பேரிடராக  அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 மதிப்பிட முடியாத அளவு சேதங்கள்  ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடி உதவியாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்   ஆந்திர அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் குறைந்து இருப்பதாகவும், ஆனாலும் பொருள் சேத மதிப்பு கணக்கிட முடியாத நிலையில் உள்ளது என்றும்  எனவே உடனடியாக மத்திய அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுளார்.