Published:Updated:

ஃபேஷன் குடும்பம்!

விகடன் விமர்சனக்குழு
ஃபேஷன் குடும்பம்!
ஃபேஷன் குடும்பம்!

திருவிழாக்களிலோ அல்லது ரொம்ப கூட்டம் கூடும் இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி செல்வார்கள். யாரும் மிஸ்ஸாயிடக்கூடாது; அதிலும் சுட்டிகள் தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒரு பதற்றத்துடனே சென்று திரும்புவார்கள்.

அப்படியும் சில சுட்டிகள் ஐஸ் க்ரீம் சாப்பிடும்போதோ அல்லது டிக்கெட் கவுண்டர் அருகிலோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டே காணாமல் போய்விடுவார்கள். அழுது புரண்டு கடைசியில் குடும்பத்துடன் சேர்ந்து அந்தப் பயணத்தை குடும்பமே என்றைக்கும் மறந்துவிடாமல் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்படி செய்துவிடுவார்கள்.
 

ஃபேஷன் குடும்பம்!

இப்படி கூட்டத்தில் யாரும் மிஸ்ஸாகிவிடாமல் இருக்க சூப்பரான குடும்ப டிரெஸ் வந்து விட்டது. அட... அதுக்காக அப்படியெல்லாம் தப்பு தப்பா நினைக்காதீங்க...(உங்க மைண்ட் வாய்ஸ் இதானே - ஒரே டிரெஸ்ஸ போட்டுப்பாங்களோ?). அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிசைன், மாடல் டிரெஸ் இப்போது மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது.

சீனா, ஜப்பான், கொரியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இப்ப இந்த  'ஃபேமிலி ஃபேஷன் கலெக்‌ஷன்ஸ்' தான் செம ஹிட். ரெடிமேட் ஆடைகளை  தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களிடம் விளம்பரப்படுத்த 'பேஷன்ஷோ'க்களை நடத்துவார்கள். அதில் ஒரு விளம்பர டெக்னிக்தான் இந்த பேமிலி பேஷன் கலெக்‌ஷன்ஸ். இந்த குடும்ப மந்திரத்துக்கு ஸ்பெஷலான வரவேற்பாம்.
 

ஃபேஷன் குடும்பம்!

இந்த ஸ்பெஷல் ஃபேமிலி ஃபேஷன் டிரஸ் அணிந்து கொண்டு பப்ளிக் பார்க், ஷாப்பிங் மால், திருவிழாக்கள் ஆகியவற்றுக்குப் போனால் யாரேனும் ஒருவர் மிஸ் ஆகிவிட்டால், ஒரே மாதிரியான டிரஸ் போட்டிருப்பதால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். அதுமட்டும் இல்லை நாம் கூட்டத்தில் தேடும் போதும் யாராவது நம்மிடம் வந்து இதே மாதிரி டிரஸ் போட்டிருக்கும் உங்கள் பிள்ளை அங்கு இருப்பதைப் பார்த்தேன் என்று நம்மிடம் தெரிவிக்க உதவும் என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்கள்.

இப்படி ஒரே மாதிரியான டிரஸ் போட்டுகிட்டு வெளியே போகும் அழகே அழகு. அதுவும் தவிர எல்லோர் கவனமும் அந்த குடும்பம் மீது திரும்பாமல் இருக்காது. ஆஹா... எவ்வளவு அழகான குடும்பம் என்றும் மனதுக்குள் பாராட்டுவார்கள். இந்த தீபாவளிக்கே நம்ம ஊர்களிலும் இந்த 'ஃபேமிலி ஃபேஷன் கலெக்‌ஷன்ஸ்' வரலாம்...

-மல்லி & கே.ஜி.