Published:Updated:

மோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை!

விகடன் விமர்சனக்குழு
மோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை!
மோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை!
மோடியை தொடர்ந்து புகழும் சசிதரூர் பதவி பறிப்பு: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை!

புதுடெல்லி: பிரதமர் மோடியை புகழ்ந்த சசிதரூர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மோடி பிரதமர் ஆனதிலிருந்து பல்வேறு தருணங்களில் அவரை புகழ்ந்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில்  மோடி அண்மையில் "தூய்மை இந்தியா" திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் உள்ளிட்ட 9 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை வரவேற்ற காங்கி்ரஸ் செய்தி தொடர்பாளர் சசிதரூர், பிரதமர் மோடி நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறார் என்று புகழாராம் சூட்டினார்.

இதற்கு கேரள மாநில காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்துக்கு புகார் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சசிதரூரை நீக்கி கட்சி மேலிடம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

சசி தரூரின் பதவி பறிப்புக்கு, அவரது மனைவி மரணம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்கள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சையும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஒருவரை கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் வைத்திருக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பாததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே காங்கிரசின் இந்த நடவடிக்கை அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.