Published:Updated:

வந்து விட்டது சோலார் ஆர்ட்!

விகடன் விமர்சனக்குழு
வந்து விட்டது சோலார் ஆர்ட்!
வந்து விட்டது சோலார் ஆர்ட்!

ப்போதெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை வந்து விட்டது. சோலார் அடுப்பு, சோலார் வண்டி போல சோலார் ஆர்ட்டும் வந்து விட்டது. ஆம் சூரிய ஒளியைக்கொண்டு ஓவியம் வரைவது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோர்டான் மாங் ஓசான் (Jordan Mang-osan) என்ற ஓவியரின் ஐடியா இது.

வந்து விட்டது சோலார் ஆர்ட்!

உலகில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது. அதனால்தான் சாதிக்கத் துடிப்பவர்கள் எதையாவது செய்யவேண்டும் என்று துடிதுடிப்புடன் இருப்பார்கள். சில ஓவியர்கள் பிரஷ் இல்லாமலேயே கை விரல்களைக் கொண்டும், மணல், காய்கறிகள், பொருட்கள் என்று பலவிதத்தில் ஓவியங்களில் தீட்டி அசத்துவருகிறார்கள்.

வந்து விட்டது சோலார் ஆர்ட்!

அந்த வரிசையில் நமது ஜோர்டானும் ஓவியங்கள் என்றாலே பிரஷ் வைத்துதான் வரைய வேண்டும் என்பதிலிருந்து கொஞ்சம் மாற்றி யோசித்தார். ''எனக்கு பிரஷ், வண்ணங்கள், பேப்பர் இவை எதுவுமே தேவையில்லை வெறும் உருப்பெருக்கி கண்ணாடி (Magnifying glasses), மர பலகை தந்தால் போதும் அழகிய ஓவியங்களைத் தீட்டிக் காட்டுவேன்" என்று சவால் விடுகிறார்.

சிறு வயதில் நாம் பூத கண்ணாடியின் மீது வெயில் படவைத்து பேப்பரை பற்றவைப்பது, மற்றவர்கள் மீது சூடு வைப்பது என்று தமாஷாக விளையாடுவோம். ஆனால் ஜோர்டான் மங்க் ஓசான்,  பூத கண்ணாடியின் வழியாக சூரிய ஒளியை மரப்பலகையின் மீது விழச் செய்து அழகான ஓவியங்களை உருவாக்கி அனைவரையும் அசத்திவருகிறார்.

வந்து விட்டது சோலார் ஆர்ட்!

பிலிப்பைன்ஸ் மக்கள் 'பூத கண்ணாடியை வைத்துத் தேடினாலும் இதுபோல கலைஞன் நமக்குக் கிடைக்க மாட்டான்' என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள்.  

என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர்.ராஜமாணிக்கம்