Published:Updated:

சசிதரூர் பதவி பறிப்புக்கு வெங்கையா நாயுடு கண்டனம் !

சசிதரூர் பதவி பறிப்புக்கு வெங்கையா நாயுடு கண்டனம் !
சசிதரூர் பதவி பறிப்புக்கு வெங்கையா நாயுடு கண்டனம் !
சசிதரூர் பதவி பறிப்புக்கு வெங்கையா நாயுடு கண்டனம் !

புதுடெல்லி: 'தூய்மை இந்தியா' திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த சசிதரூரை காங்கிரஸ் தலைமை அக்கட்சியில் இருந்து நீக்கியதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சசிதரூரின், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பதவி இன்று பறிக்கப்பட்டது.

இந்நிலையில்,  டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சசிதரூர் பதவி பறிப்பு நடவடிக்கை நகைப்புக்குரியது என்றும்,  அரசியல் நாகரீகம் இல்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.

'தூய்மை இந்தியா திட்டம்' அரசியல் பிரசாரம் அல்ல என்றும் இந்தியா முழுமைக்குமான திட்டம் என்றும் வெங்கையா கூறியுள்ளார்.

இதற்கிடையே சசிதரூர் மீதான நடவடிக்கைக்கு கேரள காங்கிரஸ் கமிட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது.