Published:Updated:

உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?

உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?
உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?

ஒரிகாமி தெரியும் கிரிகாமின்னா..? ஒரிகாமி என்பது ஜப்பானிய காகிதக் கலை. காகிதத்தை மடித்து உருவங்களை உருவாக்குவது ஒரிகாமி. கிரிகாமியும், ஒரிகாமியும் 'ட்வின் பிரதர்ஸ்' என்று சொல்லலாம். கிரிகாமியும் ஜப்பானியக் கலைதான்...

உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?

கிரிகாமி என்பது காகிதத்தை வைத்து உருவாக்கப்படும் கலைதான் என்றாலும், இதில் கத்தரிக்கோலைப் பயன்படுத்தி காகிதத்தை வெட்டி உருவங்களை உருவாக்குவதுதான். இதன் சிறப்பு.

இந்த கலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர் மைசூர் ஹுசைனி. கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பிறந்தவர். ''இந்தக் கலையைச் செய்வதின் மூலம் நமது கைகளுக்கு வேலை கொடுப்பதோடு, நம் கற்பனைத் திறன் வளரும். அதோடு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளில் இருந்தும் நாம் விடுபடலாம்'' என்கிறார் ஹுசைனி.

உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?

மேலும், ''கிரிகாமி கலையில் உருவானப் பொருட்களைக் கொண்டு வீட்டையும் அழகுபடுத்தலாம்'' எனவும் அவர் கூறுகிறார்.

கிரிகாமியில் உருவான படைப்புக்கள் சில இங்கே...

உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?

கே.கணேசன்