Published:Updated:

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!
'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!

டல் கடந்து வாழும் தமிழர்களுக்கு தாய் நாட்டின் மீது அன்பும், பாசமும் அதிகமாகவே இருக்கும். அதற்கு ஓர் உதாரணமாக, மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு மாநிலத்தை குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டில் நடக்கும், நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதை பினாங்கு மாநில மண்ணில் செயல்படுத்திவிடுகிறது ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’. இந்த சங்கம் இத்தீரிஸ் என்ற தமிழரால் தொடங்கப்பட்டு, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், மனித உரிமை, கல்வி என்று பல துறையிலும் செயல்பட்டு வருகிறது.

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!

இது குறித்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் நம்மிடம் பேசும் போது, ''தமிழ்நாட்டில் நடக்கும், இயற்கை விவசாய நுட்பங்களை ‘பசுமை விகடன்’ வழியாக தெரிந்து கொள்கிறோம். ஏட்டுக் கல்வியுடன் நின்றுவிடாமல், ‘மண்புழு விஞ்ஞானி’ பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், ‘பூச்சி’ செல்வம், முன்னோடி இயற்கை விவசாயி ‘பணிக்கம்பட்டி’ கோபாலாகிருஷ்ணன் போன்றவர்களை மலேசியாவுக்கு வரவழைத்தும் பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு எங்கள் விவசாயிகளை அழைத்து வருகிறோம். இதில் தமிழர், மலேசியர், சீனர் என்ற பாகுபாடு கிடையாது.

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!

கடந்த ஆண்டு நாங்கள் தமிழகம் வந்தபோது கூட,  இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், எங்கள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சியை விளக்கமாக கற்றுக்கொடுத்தார். மலேசியா திரும்பிய விவசாயிகள், நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த விஷயங்களை செயல்படுத்த தொடங்கி விட்டனர்.

குறிப்பாக, இந்த விஷயத்தில் சீன விவசாயிகள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அமுத கரைசல், பஞ்சகவ்யா போன்ற  செலவு குறைந்த இயற்கை இடுப்பொருட்களை வைத்து, அதிக மகசூல் எடுத்து வருகிறார்கள்.

'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!

‘எங்களுக்கு நம்மாழ்வார்தான்  விவசாய குரு’ என்று சொல்லி அவரது படத்தை வைத்து வணங்கி வருகிறார்கள். நமது தமிழ் விவசாயிகளும், சீன விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு விதவிதமான காய்கறிகளை சாகுபடி செய்து,  நல்ல விளைச்சல் எடுக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான  போட்டியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே நம்மாழ்வார், பினாங்கு மாநிலத்தில் சில வாரங்கள் தங்கி, இயற்கை விவசாயப் பயிற்சிக் கொடுத்தார். அதன் பயனை இப்போது அறுவடை செய்து வருகிறோம். ஆமாம், மலேசிய அளவில், பினாங்கு விவசாயிகள் இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளார்கள். இந்த எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே சேரும்'' என்று உணர்ச்சிகரமா பேசி முடித்தார் சுப்பாராவ்.