Published:Updated:

“வேட்டி கட்டினதுக்காகவே பிரதமர் ஆக முடியாது!”

எஸ்.கலீல்ராஜா, படம்: சொ.பாலசுப்ரமணியன்

“வேட்டி கட்டினதுக்காகவே பிரதமர் ஆக முடியாது!”

எஸ்.கலீல்ராஜா, படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

காங்கிரஸ் என்றாலே, கலாட்டாதானே! இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜா அதிரடியாக நீக்கப்பட்ட பின், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸைக் கூண்டோடு கலைத்து உத்தரவிட்டிருக்கிறார் ராகுல் காந்தி. இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த யுவராஜா, மாணவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பதவி பறிக்கப்பட்ட கலையர சன் இருவருமே ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் என்பதால், வாசன் கூடாரத்தில் அனல். 'எல்லாம் கார்த்தி சிதம்பரம் வேலை’ என்று வாசன் அணி கொதித்துக்கொண்டிருக்க, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜாவைச் சந்தித்தேன்.

''ஏன் இவ்வளவு கலாட்டா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லாம் இங்கே இருந்து டெல்லி போய் உட்கார்ந்திருக்கிற ஆட்கள் பண்ற லாபி. தமிழ் நாட்டில் நடக்கும் உண்மையான விஷயங்களைத் தலைமைக்கு யாரும் எடுத்துச் சொல்ற தில்லை. அங்கே இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட ஆட்களைக் கையில் வெச்சுக்கிட்டுத் தப்பான தகவலைத் தலைமைக்குக் கொடுத் துட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... காமராஜர் காலத்துக்கு அடுத்து தி.மு.க., அ.தி.மு.க-தான் மாறி மாறி ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. 47 வருஷமா ஆட்சியைப் பிடிக்கவே இல்லை காங்கிரஸ். கட்சிக்கு வர்ற இளைஞர்களே கொஞ்சம் பேர்தான். அவங்களையும் அவமானப் படுத்தினா எப்படி? நீங்க காங்கிரஸ் கட்சியை வளர்க்கலை... பின்னாடியே இழுத்துட்டுப்போறீங்க!''

“வேட்டி கட்டினதுக்காகவே பிரதமர் ஆக முடியாது!”

''மாணவர் காங்கிரஸ் தலைவரா இருந்த கலையரசன், கல்லூரித் தேர்வில் கலந்துகொள்ளவில்லைனு சொல்லித்தானே நீக்கியிருக்காங்க?''

''சாதாரண மாணவர் அமைப்புல இருந்தாலே, கடுமையான வேலை இருக்கும். ஒரு தேசியக் கட்சியின் மாணவர் அமைப்புக்கு, தலைவர் பதவிக்குப் போட்டியிடணும்னா எவ்வளவு வேலை பார்க்கணும்? ஆதரவு திரட்ட நிறைய ஊர்களுக்குப் போகணும். இது தவிர, உறுப்பினர் சேர்க்கைக்காக ஆறு மாசம் கலையரசன் அலைஞ்சிருக்கார். அதனால, எக்ஸாம் எழுதலை. அவர் அந்தக் கல்லூரியில் படிச்சதுக்கு, எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கு. இப்போ கல்லூரி மாணவர்கள் எல்லாரும் பரீட்சையை ஒழுங்கா எழுதவா செய்றாங்க? முதல்ல தேர்தல்ல கள்ள ஓட்டுப் போட்ட ஒன்பது பேரை நீக்கினாங்க. கட்சியில் ஆள் சேர்றதே கஷ்டமா இருக்கு. 'எச்சரிக்கை கொடுத்துவிட்ரலாம். கடுமையான நடவடிக்கை வேண்டாம்’னு சொன்னோம். நாங்க சொன்னதை என்னைக்குக் கேட்டிருக்காங்க. மொத்த நிர்வாகிகளையும் கூண்டோடு கலைச்சது மாணவர்களை அவமானப்படுத்தும் செயல். தலைமை பண்ணியிருக்கும் மிகப் பெரிய தப்பு. இதை ஒருநாள் உணருவாங்க!''

''பொதுவா, காங்கிரஸ்னாலே மாணவர்கள் மத்தியில கோபமான மனநிலை இருக்கே?''

''நூறு பேர் இருந்தா பத்து பேருக்கு மாற்றுக் கருத்து இருக்கத்தான் செய்யும். இலங்கைப் பிரச்னைகுறித்து மாணவர்கள் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். அது நியாயமான போராட் டம். அதே மாதிரி எல்லாப் பிரச்னைகளுக்கும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடணும். சில தவறான தலைவர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் மத்தியில் காங்கிர ஸைப் பத்தி தவறாப் பிரசாரம் பண்ணியிருக் காங்க. சீக்கிரமே எங்க நிர்வாகிங்க கல்லூரி கல்லூரியாப் போய், மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு என்னல்லாம் பண்ணியிருக்காங்கனு விழிப்பு உணர்வுப் பிரசாரம் பண்ணுவாங்க!''  

''கார்த்தி சிதம்பரம் பத்தி உங்க கருத்து என்ன?''

''கார்த்தி சிதம்பரம், நிதியமைச்சரின் மகன். ஆனா, அமைச்சரின் மகன் என்பது மட்டுமே ஒருவருக்கு அரசியலில் தகுதி ஆகிடாது. கட்சியில் எல்லாரும் கருத்து சொல்லலாம். ஆனா, அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கணும். அமைச்சரின் மகன்கிறதுக்காக எதுவும் பேசக் கூடாது. 'இளைஞர் காங்கிரஸ் செயல்படவே இல்லை’னு சொல்றார். அதைச் சொல்றதுக்கு ஒரு தகுதி வேணுமே? தொண்டர்களைப் பார்க்கணும். கட்சியில் பொறுப்புக்கு வரணும். நான் 27 வருஷமா காங்கிரஸ் கட்சியில் இருக்கேன். கல்லூரி படிக்கிறதுல இருந்து ஒவ்வொரு கட்டமா காங்கிரஸ் கட்சியை வளர்த்துட்டு இருக்கேன். ஆனா, அவர்..?''

'' 'ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமர் ஆகணும்’னு கமல் பேசியது பரபரப்பாச்சே?''

''எங்களைப் பொறுத்தவரைக்கும் ராகுல் காந்திதான் பிரதமர் ஆகணும். அதுல மாற்றுக் கருத்து இல்லை. வேட்டி கட்டினதுக்காகவெல்லாம் பிரதமர் ஆகிட முடியுமா என்ன?''

“வேட்டி கட்டினதுக்காகவே பிரதமர் ஆக முடியாது!”

''மண்ணெண்ணெய் தர்றது இல்லைனு மத்திய அரசு மேல் ஜெயலலிதா வழக்கு தொடுத்திருக்காங்களே?''

''தமிழ்நாட்டை மத்திய அரசு பாரபட்சமா நடத்துதுனு சொல்றாங்க. அப்படி நடத்தினா, ஏன் கூடங்குளத்துல அணு உலை நிறுவி 1,000 மெகாவாட் மின்சாரம் கொடுக்கணும்? வேற ஏதாவது ஒரு மாநிலத்தில் நிறுவியிருக்கலாமே? நான்கு வழிச் சாலை யார் கொண்டுவந்தது? இன்னைக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறு மணி நேரத்தில் போக முடியுதுன்னா, அதுக்கு யார் காரணம்? மண்ணெண்ணெய் பிரச்னை இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களில் இருக்கும் பிரச்னை. அது நாட்டின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை. அதுகூடப் புரியாம தமிழக முதல்வர் சண்டை போடுறாங்க. ஒருவேளை தன் தப்பை மறைக்க எங்களைக் குறை சொல்றாங்கபோல!''

''ஜி.கே.வாசன் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிர் திசையிலேயே பயணிக்கிறாரே... மீண்டும் த.மா.கா. மலருமா?''

''பெருந்தலைவர் காமராஜர், மூப்பனாருக்கு அடுத்து காங்கிரஸ் கட்சி மேல், நேரு குடும்பத்தின் மேல் அதிகப் பற்றுகொண்டவர் வாசன். ஆனால், அதையும் மீறி தமிழக மக்களுக்காக, கட்சித் தொண்டர்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழக மக்கள் உணர்வு மதிக்கப்படாதபோது தன் விசுவாசத்தையும் மீறி காங்கிரஸைவிட்டு வெளியே வந்தார் மூப்பனார். அதே ரத்தம்தான் வாசன் உடம்பிலும் ஓடுது. அப்போ தமிழ் மாநில காங்கிரஸ், தானா உருவானது. இப்போ அதற்கான சூழல் இல்லை. அதற்கான சூழலை உருவாக்காமல் இருக்க வேண்டியது காங்கிரஸ் தலைவர் களின் பொறுப்பு!''