Published:Updated:

முதல்வர் ஓ.பி.எஸ்.சுடன் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சந்திப்பு!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே இதுவரை 13 கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று உள்ளது. இந்த பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று (15ஆம் தேதி) சந்தித்து பேசினர். அப்போது, பணி நிரந்தரம் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.