Published:Updated:

ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்: சொல்கிறார் நாராயணசாமி

ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்: சொல்கிறார் நாராயணசாமி
ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்: சொல்கிறார் நாராயணசாமி
ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்: சொல்கிறார் நாராயணசாமி

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் நாரயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விமர்சிக்கவோ கருத்து கூறவோ விரும்பவில்லை. அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. இந்த நேரத்தில் நான் பேசுவது நல்லதல்ல.

தமிழகத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவது நல்லதல்ல. தமிழகம் அமைதியான நிலைக்கு வந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும். தமிழகத்தில் தலைமை இல்லாதது போன்ற நிலை உள்ளது. ஜெயலலிதா ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.