Published:Updated:

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடை விதிக்க கோரி தே.மு.தி.க திடீர் வழக்கு!

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடை விதிக்க கோரி தே.மு.தி.க திடீர் வழக்கு!
சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடை விதிக்க கோரி தே.மு.தி.க திடீர் வழக்கு!
சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடை விதிக்க கோரி தே.மு.தி.க திடீர் வழக்கு!

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  தே.மு.தி.க. திடீரென மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக தே.மு.தி.க. துணை செயலாளரும், வழக்கறிஞருமான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடருவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடக அரசுக்கும், கர்நாடக உயர் நீதிமன்றமும் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் பவானி சிங் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் பவானி சிங், கர்நாடக அரசின் உத்தரவோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவோ இல்லாமல் நேரடியாக குற்றவாளிகளின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக ஆஜராவதற்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால் அந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியானதும் அந்த குறிப்பிட்ட வழக்கறிஞருடைய பணி அந்த வழக்கில் நிறைவடைகிறது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அரசு தரப்பில் மேல் முறையீடு செய்ய சிறப்பு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளது.

எனவே இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங்கின் நியமனம் ஏற்கனவே முடிவு பெற்றுவிட்டது. எனவே, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீது அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.