Published:Updated:

பெங்களூரு சிறையிலிருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு!

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனு திடீரென வாபஸ் பெறப்பட்டது.

பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இன்றுடன் 19 நாட்களாக இருக்கும் நிலையில், அவரை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை மற்றும் மக்கள் நலன் கருதி ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.