Published:Updated:

உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!

உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!

ணினி, வாங்கிய புதிதில் செயலாற்றும் வேகம், நாட்கள் செல்லச் செல்லக் குறைந்துவிடும். ஒரு கட்டத்தில் நம் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நகர ஆரம்பித்துவிடும். அதன் செயல்வேகத்தை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம்?!

* வாரத்தில் ஒருநாள், கணினியில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தற்காலிக ஃபைல்களைஅழிக்க வேண்டும். அதற்கு, Start பட்டணை கிளிக் செய்து, அதில் Run ஆப்ஷனை செலக்ட் செய்து,Temp என டைப் செய்தால், தேவையற்ற தற்காலிக ஃபைல்கள் தோன்றும். அவற்றை ஒட்டுமொத்தமாக செலக்ட் செய்து Delete பட்டனை அழுத்தி அழித்துவிடலாம்.

* கணினியில் உள்ள RAM எனப்படும் Random Access Memory அளவை தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்துவது நல்லது. பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்தும் கணினிக்கு 1GB என்பது போதுமானது. இதுவே டிசைனிங், அனிமேஷன் போன்றவற்றுக்காக பயன்படுத்தும் கணிணியில் கட்டாயம் RAM அளவை அதிகப்படுத்த வேண்டும்.

* கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருட்களையும், வன்பொருட்களையும் நீக்குவதோடு, அவற்றை மேலும் இணைக்காமல் இருப்பது நல்லது.

உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!

* புதிதாகக் கணினி வாங்கும்போது அத்துடன் ஏராளமான மென்பொருட்களை நிறுவி இருப்பார்கள். அவற்றில் தேவையான மென்பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றை நீக்கி விடுவது நல்லது. அப்படி நீக்குவதற்கு முன்பு அவற்றிற்குரிய Copy இருந்தால்அதை CD/DVD போன்றவற்றில் பதிவு செய்துகொள்வது பின்பு தேவைப்படும் பட்சத்தில்உதவியாக இருக்கும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ஆனால், கட்டாயம் கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (Firewall) வைரஸ் எதிர்ப்பான் (Anti virus),  ஸ்பைவேர் எதிர்ப்பான் (Anti spyware) இருப்பதும், அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டேஇருப்பது அவசியம்.

*FireFox, Chrome போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட browsers கணினியில் இன்ஸ்ட்டால் செய்திருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்வைத்துக்கொண்டு மற்றவற்றை uninstall செய்துகொள்வது கணினியின் வேகத்தை அதிகரிக்கும்.

* ஹார்டு டிஸ்க் எனப்படும் கணினியின் சேமிப்பு பகுதியில் தேவையற்ற ஃபைல்களை தேங்கவிடாமல் உடனுக்குடன் அழித்து விடுவது நல்லது. அதிலும் குறிப்பாக திரைப்படங்கள் போன்றஅதிக மெமரியை எடுத்துக்கொள்ளும் ஃபைல்களை தேங்க விடாமல் உடனுக்குடன் அழிப்பதுகணினியின் வேகத்தை அதிகரிக்க உதவும்.

உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!

* G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட சாட்டிங் பயன்பாடுகளைநிறுவியிருப்பவர்கள், தேவையற்றவற்றை uninstal செய்துவிட்டு, ஒன்றை மட்டும்பயன்படுத்தலாம். அல்லது digsby  போன்ற ஒரே ஒரு instant messenge நிறுவிப் பயன்படுத்தலாம்.

* சிலர் கணினியின் முகத்திரையில் ஏராளமான ஷார்ட்கட் ஃபைல்களையும், ஷார்ட்கட்பயன்பாடுகளையும், அதிக மெமரி அளவுகொண்ட ஃபைல்களையும் வைத்திருப்பார்கள்.இதனால், கணினியின் இயக்க வேகம் பெருமளவு குறையக்கூடும். எனவே, அதை தவிர்க்கவும்.

* கவனிக்க... இணையத்துடன் இணைக்காத கணினிகள் (இன்டர்நெட் இணைப்பில்லாதவை)மற்றும் Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளின் வேகமானது,பலமடங்கு அதிகமாக இருக்கிறது என்பது கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பரவலாகச்சொல்லும் கருத்து.

- சா.வடிவரசு