Published:Updated:

'டீ விற்றவரே பிரதமர் ஆகும்போது...!' - உத்தவ் தாக்கரே சீண்டல்: பா.ஜனதா ஆவேசம்!

'டீ விற்றவரே பிரதமர் ஆகும்போது...!' - உத்தவ் தாக்கரே சீண்டல்: பா.ஜனதா ஆவேசம்!
'டீ விற்றவரே பிரதமர் ஆகும்போது...!' - உத்தவ் தாக்கரே சீண்டல்: பா.ஜனதா ஆவேசம்!
'டீ விற்றவரே பிரதமர் ஆகும்போது...!' - உத்தவ் தாக்கரே சீண்டல்: பா.ஜனதா ஆவேசம்!

மும்பை: டீ விற்றவர் பிரதமராக முடியும் என்றால் என்னாலும் முதலமைச்சர் ஆக முடியும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் 25 ஆண்டு கால கூட்டணி கட்சிகளாக விளங்கிய பா.ஜனதா - சிவசேனா இடையே, சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ கட்சி பத்திரிக்கையான 'சாம்னா'வுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, "பால் தாக்ரே ஒருபோதும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிச்செல்ல மாட்டோம். டீ விற்பனை செய்த சாதாரண நபராக இருந்த நரேந்திர மோடி, இந்த நாட்டின் பிரதமராக முடியும் என்றால் என்னாலும் முதலமைச்சராக முடியும்.

மகாராஷ்ட்tராவில் பிரசாரம் செய்யும் மத்திய அமைச்சர்கள் தேர்தலுக்கு பின் இங்கு வரமாட்டார்கள். சிவசேனா மட்டுமே இங்கு இருந்து தொடர்ந்து மக்களும் சேவை செய்யும் என்பதை  மக்கள்  உணர வேண்டும். அதிகாரத்துக்கான பசியுடன் இருக்கும் பா.ஜனதா எங்களுடனான கூட்டணியை முறித்து கொண்டது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நாட்டை ஆள்வது போன்று மாநிலத்தையும் ஆள பா.ஜனதா நினைக்கிறது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தால் மகாராஷ்ட்ராவை பிரிக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் அது  நடக்க சிவசேனா அனுமதிக்காது" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்  டீ விற்றவர் என்று மோடியை அவமதிக்கும் வகையில் பேட்டியளித்திருப்பதாக உத்தவ் தாக்கரேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, " நாங்கள் அனைவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனால் அவர்கள் எங்களை அவமதித்தால் அதனை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறியுள்ளார்.