Published:Updated:

அனுமதியின்றி போராட்டம்: அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு! !

சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்திய அ.தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பஸ் எரிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

மேலும், பல்வேறு இடங்களில் அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் காவல்துறையினரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்திய அ.தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், போராட்டம் நடத்தியோர் மீது வழக்கு மட்டுமே பதிந்த நிலையில் விசாரணை நடக்கவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.