Published:Updated:

'சராசரியாக இருக்காதீர்கள்!'

 'சராசரியாக இருக்காதீர்கள்!'
'சராசரியாக இருக்காதீர்கள்!'
 'சராசரியாக இருக்காதீர்கள்!'

வாழ்வியல், பொருளாதாரம், நிர்வாகம், சுயமுன்னேற்றம்,பங்குச்சந்தை வியாபாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து எளிதில் புரியும் வண்ணம் புத்தகம் எழுதியவர் சோம. வள்ளியப்பன். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரியில், வருங்கால இளைஞர்களான மாணவர்களுக்கு, அவர்களின் திறமைகளை செயல்படுத்தும் வழிமுறைகளையும், சமுதாயத்தின் மாணவர்களின் பங்கு பற்றியும் 'இளமையில் தலைமை' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையிலிருந்து...

 "முதலில் நீங்கள் எல்லாரையும் போல் சராசரியான நபராக இருக்காதீர்கள், சராசரி என்பது ஒரு மாயத்தோற்றம், சராசரியின் பின்னால் ஒளிந்துகொள்ளாதீர்கள் அது ஒரு மாயை, சராசரி என்பது எல்லோரையும் பொதுவாக குறிப்பிடுவன, நீங்கள் உங்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிகொள்ள வேண்டும், உதாரணமாக "தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!" என்று கூறினார் பாரதியார்.

தினமும் சாப்பிட்டு தூங்கி அடுத்தவர்களை குறைகூறுபவர்களை பாரதி வேடிக்கை மனிதர் என்று கூறுகிறார், கடவுள் நம் அனைவரையும் படைக்கும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான மூளையையும், மனதையும் படைத்து இருக்கிறான், ஆனால் அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் விதத்தில் தான் அவர்கள் தனித்து சிறந்து விளங்குகிறார்கள். கண்ணதாசன், ஐன்ஸ்டைன் போன்றவர்களுக்கு தனியாக மூளை ஆபரேஷன் பண்ணுனாங்களா... இல்லையே, அவர்களுக்கு தெரிந்ததில் சிறந்து விளங்கினார்கள், அதனால் இன்றும் புகழப்படுகிறார்கள். ஆகவே, எல்லரையும் போல் சராசரியாக இருக்காதீர்கள்.

பத்து டப்பாவை அடுக்கிவைத்தால் அதில் ஒன்று தனித்து, உயர்ந்து தெரியவேண்டும், நாம் எங்கு இருந்தாலும் அதில் தனியாக தெரியவேண்டும், மொழி,நிறம்,பணம், அப்பா,அம்மா வேலை ஆகியவைகள் பிரச்னை கிடையாது, மூளைக்கும் மனதிற்கும் இந்த வித்தியாசங்கள் தெரியாது. நீங்கள் உங்களையே கேட்டுப்பாருங்கள் உங்களுக்கான நிறைய பதில்கள் கிடைக்கும்.

நான் என்னிடம் கேட்பேன், "வள்ளியப்பன் அவ்வளவுதானா நீ?"- அப்படி கேட்கும்போது எனக்கு இன்னும் நான் நிறைய எழுதவேண்டும் என்று தோன்றும். உலகத்தின் மிகபெரிய நூற்கள்ஞ்சியம் நமது மனதுதான் என்று கூறினார் விவேகானந்தர். அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். உங்களுக்கான சிறப்புகள் என்ன என்று என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? உங்களுக்கான best என்ன என்று என்றாவது முயற்சி செய்தீர்களா? முயற்சி செய்தால்தான் உங்கள் best என்ன என்று உங்களுக்கு தெரியும்.

 'சராசரியாக இருக்காதீர்கள்!'

முயற்சி செய்யாமலே என்னால் முடியாது என்று சில பேர் இன்றும் இருக்கிறார்கள், சிலபேர் இன்னும் சைக்கில் ஓட்டத்தெரியாமல் இருக்கிறார்கள், சில பேருக்கு செல்போன், கம்யூட்டர் பயன்படுத்த தேரியாமல் இருக்கிறார்கள், நம்மிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால் நாம் எதற்கும் முயற்சி செய்வதே கிடையாது, நமக்கு இது வராது, நம்மால் முடியாது என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

உனக்கு எதுவெல்லாம் வராது என்று சொல்கிறார்களோ அதை முயற்சி செய்து பார்க்கவேண்டும். உனக்கு பாட வராது என்று சொல்கிறார்களா, நீ பாடி பாரு, யாரும் கேட்கவேண்டாம் நீயே கேளு, உன்னையே கேளு, எதெல்லாம் வராது என்று சொல்கிறார்களோ அதெல்லாம் முயற்சி செய்துபார், கண்டிப்பாக உங்களால் முடியும். நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. விஞ்ஞானம் ,கல்வி,பொழுதுபோக்கு,சமுதாய சேவை என்று எந்த பாதையில் வேண்டுமானாலும் நீங்கள் போகலாம்,

எனவே எதையும் சிறியதாக நினைக்கவேண்டாம், உள்ளுவதெல்லாம் உயருள்ளல் என்பதற்கு ஏற்றார்போல் அடுத்த 80 ஆண்டுக்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதை சிந்தியுங்கள்.

இன்று உலகமே பார்த்து பிரமிக்கிக்கும் மைக்ரோசாஃப்டின் தலைவர், ஆந்திராவில் படித்த ஒரு சாதாரண பொறியியல் மாணவர். பெப்சிக்கோ நிறுவனத்தின் தலைவி யாரு, சென்னையில் மகளிர் கல்லூரியில் படித்த சாதாரண பெண் இந்திரா நூயி, இன்று அந்த நிறுவனத்தின் தலைவியாக இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை உலகத்தில் ஆஸ்கார் வாங்கியவர் அவருக்கு தெரிந்த இசையில் சிறந்து விளங்கினார், உலகமே அவரை பாராட்டியது. உங்களுக்கு என்று ஒரு பாதையை உருவாக்கி கொள்ளுங்கள்.

ரமணன் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர், இன்று அவர் கூறும் வானிலை அறிக்கையால் பிரபலமானார் அவருக்கு தெரிந்ததில் தெளிவாக விளக்கினார், அதேபோல் சமையலில் தாமோ, சகாயம் மாவட்ட ஆட்சியர்; அவரோட வேலையில் சிறப்பாக விளங்கினார்.அவரை யாராலும் மாற்ற முடியவில்லை.

பல பேர் இன்று சாதித்தற்கு உதாரணமாக வாழ்கிறார்கள், அவர்களை போல் நீங்களும் ஏதாவது ஒரு பாதையில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்!" என்று கூறி சோம.வள்ளியப்பன் தனது சிறப்புரையை முடித்தார்.

-ஏ. ஆமினா ( மாணவ பத்திரிகையாளர்)