Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

'ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அனைத்து அம்சங்களுடனும் இரண்டறக் கலந்து இருப்பவை பெட்ரோலியப் பொருட்கள்!’ பச்சைக் குழந்தைகூடப் பதில் சொல்லும் பொருளாதார நிதர்சனம் இது. இப்போது வரலாறு காணாத வகையில் விண்ணை முட்டி நிற்கும் காய்கறி விலைவாசியின் பின்னால் நின்று மிரட்டுவதும் டீசல் விலை ஏற்றம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், மத்தியப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு பகீர் தீக்குச்சியைப் பற்றவைத்திருக்கிறார். நமது நாட்டுக்குத் தேவையான பெட்ரோலிய வளம் நம்மிடமே நிலத்தடியில் தாராளமாகத் தேங்கிக்கிடக்கிறதாம். ஆனால், அதை முழுமையாக எடுக்க முடியாதபடி அதிகார வட்டாரமும் முகம் தெரியாத ஒரு கூட்டமும் தடைபோடுகிறதாம். 'பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்துவிடக் கூடாது என்ற நோக்கில்தான் அந்த முகம் தெரியாத கூட்டம் முட்டுக்கட்டை போடுகிறது' என்று சொல்கிறாரே தவிர, அந்தக் கூட்டத்தை அடையாளம் காட்ட மறுக்கும் மொய்லி, 'எனக்கு முன் இருந்த பெட்ரோலியத் துறை அமைச்சர்களுக்கும் அந்த லாபியிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது' என்று கூடுதல் தகவல் சொல்கிறார். ஆனால், முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் இதே துறையின் அமைச்சராக இருந்த ராம் நாயக், 'அப்படி எல்லாம் மிரட்டல் எதுவும் வந்தது கிடையாது' என்று போட்டு உடைத்துவிட்டார்.

ஆள்வோரே... மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... மிரட்டலுக்கு அஞ்சுகிற ரகமா நீங்கள்? நீதிமன்றத்திடம் இருந்தும், எதிர்க் கட்சிகளிடம் இருந்தும், நேரடியாகவே மக்களிடம் இருந்தும் இதுவரை கிளம்பிய மிக நியாயமான மிரட்டல்களுக்கு எல்லாம் துளிகூட அசைந்துகொடுக்காத உங்களையா ஒரு லாபி மிரட்டிவிட முடியும்? ஒரு சின்னஞ்சிறு கூட்டத்தின் லாபத்துக்காகத்தான், 120 கோடி மக்கள் தாள முடியாத சுமையில் தடுமாறுகிறார்கள் என்பது உண்மையானால், அதைப் பார்த்துக்கொண்டு அரசாங்கம் சும்மா இருப்பதைவிட மாபெரும் துரோகம் வேறென்ன இருந்துவிட முடியும்?