Published:Updated:

காஷ்மீரில் நாளை தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!

காஷ்மீரில் நாளை தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!
காஷ்மீரில் நாளை தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!
காஷ்மீரில் நாளை தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!

புதுடெல்லி: காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை அங்கு செல்கிறார்.

ஒரு நாள் பயணமாக காஷ்மீர் செல்லும் அவர், ஆளுநர் மாளிகையில் பல்வேறு தரப்பு குழுக்களை சந்தித்துப் பேசுகிறார். மேலும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்புத் திட்டங்களையும் மோடி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
 
இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் அவரது பயணம் இருக்கும் என கூறப்படுகிறது.

வெள்ள சேதம் குறித்து முழு விவரங்களை பிரதமரிடம் அளிப்பதற்காக மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் காஷ்மீரில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு காஷ்மீர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.