மத்திய அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'அண்மையில் இந்திய ரூபாய்க்கு என உருவாக்கப்பட்ட புதிய

சின்னத்தைப் பதித்து, புதிய நாணயங்கள் விரைவில் வெளியிடப்படும்' என்று கூறியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

வலிமை, துணிவு, பெருமை, நம்பிக்கை ஆகிய நான்கின் அடையாளங்களாக அசோகச் சக்கரவர்த்தி நிறுவிய சிங்கங்களில் மூன்று ஏற்கெனவே ரூபாய் நோட்டுகளில் இருக்கின்றன. ஒரு சிங்கம் மட்டும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தே இருக்கிறது.

நாட்டின் பெரும்பகுதி மக்கள், ரத்தம் சிந்திச் சேர்த்த பணத்துக்கு ஒழுங்காக வரி கட்டிக்கொண்டு இருக்க, இன்னொரு பகுதியினர் துளிகூட நோகாமல் குறுக்கு வழியில் குவித்துவிட்ட கறுப்புப் பணம்... எங்கோ வெளிநாடுகளில் மறைந்து கிடக்கிறது. 'அதை அங்கே முதலீடு செய்தவர்கள் யார்? அவர்களுக்கு அத்தனை கோடிகள் குவிந்தது எப்படி? அதை எல்லாம் இந்திய தேசத்துக்கு மறுபடி கொண்டுவந்து சேர்ப்பது எவ்வாறு?' என்ற மாபெரும் கேள்விகளுக்கு விடை சொல்லாத வரையில், 'சின்னம்' சேர்ப்பது எல்லாம் சின்ன விஷயமாகவே இருக்கும்!

அது மட்டும் அல்ல... அரசியலும் மற்ற பொது வாழ்க்கைப் பதவிகளும் நாட்டின் நலனைக் காப்பாற்றத்தான் என்கின்ற நம்பிக்கை, அந்த நான்காவது சிங்கம் போலவே மக்களின் கண்களைவிட்டு மெள்ள மெள்ள மறைந்துகொண்டு இருக்கிறது. 'ஊழலுக்கு எதிராகக் கடும் போராட்டம் நடத்த வேண்டிய காலகட்டம் இது' என்று வெற்று முழக்கம் செய்வது மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்துவிடாது. அவர்கள் எதிர்பார்ப்பது, இடையூறு அற்ற... தாமதம் அற்ற... கட்சி பேதம் அற்ற... கடுமையான நடவடிக்கை மட்டுமே!

அது இனியும் நடக்காமல் போனால், நம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி முகத்தில் தவழும் தூய புன்னகையைக்கூட, இந்தியர்களைப் பார்த்து அவர் வெளியிடும் ஏளனப் புன்னகையாகவே உலகம் அர்த்தப்படுத்திக்கொள்ளும்!