Published:Updated:

அரசின் திட்டங்களை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களிடம் சேர்க்க மோடி வலியுறுத்தல்!

அரசின் திட்டங்களை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களிடம்  சேர்க்க மோடி வலியுறுத்தல்!
அரசின் திட்டங்களை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களிடம் சேர்க்க மோடி வலியுறுத்தல்!
அரசின் திட்டங்களை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களிடம்  சேர்க்க மோடி வலியுறுத்தல்!

புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களிடம் கொண்டு போய்  சேர்க்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்து 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தேனீர் விருந்து அளித்தார். அந்த விருந்தில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மேல்–சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே தலைமையில் சிவசேனா எம்.பி.க்களும், பிற கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், சிரோமணி அகாலிதளம், லோக்ஜனசக்தி உள்ளிட்டவற்றின் எம்.பி.க்கள் என சுமார் 400 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

விருந்தின்போது கூட்டணி கட்சி எம்.பி.க்களிடையே பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும்போது, ''நாம் பெரிதாக சிந்திக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வேண்டும். நாட்டுக்காக புதிய நோக்குடன், அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் சிந்திக்க வேண்டும். ஒரு மாற்றத்துக்கான மையமாக எம்.பி.க்கள் மாறலாம். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களோடு எம்.பி.க்கள் அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும்.

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி, அடுத்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு எம்.பி.க்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, சுத்தம், சுகாதாரம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கிச்சொல்ல வேண்டும். இது சாதகமான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தும்.

சுத்தமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது கடினமான இலக்குதான். ஆனால், நாட்டில் போலியோ ஒழிப்பில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது போன்று, அதே உத்வேகத்துடன் செயல்பட்டால் தூய்மை இந்தியா என்பதை சாதித்துக்காட்ட முடியும். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இந்த அரசு செய்கிற நலத்திட்டங்களை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்றார்.