Published:Updated:

இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்: சீமான் ஆவேசம்!

சென்னை: இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்று ஆவேசமாக சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நன்மை பயக்கும் திட்டங்களை வரையறை செய்து நிறைவேற்ற திறனற்ற மோடி அரசு, மக்களை திசைதிருப்ப இந்தி பிரச்னையை எழுப்புகிறது. மக்களின் நலனிற்காக போராடும் அரசியல் சக்திகளின் ஆற்றலை திசை திருப்பி வீணடிக்கும் நோக்கம் கொண்டதாக இந்தி திணிப்பு இருக்கிறது.

இந்த நாட்டின் வளங்களை பயன்படுத்தி, தொழில் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளை பெருக்க வகையில்லாமல், சமஸ்கிருதம் வளர்ப்பு, இந்தி திணிப்பு என்று எதிர்மறை வேலைகளில் ஈடுபடுகிறது மோடி அரசு. பா.ஜனதா கட்சியினர் தமிழ்நாட்டை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டங்களை கண்ட தமிழகம், இந்தி மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது" என்று கூறியுள்ளார்.