Published:Updated:

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!
இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

பாரம்பரியம் என்கிற சொல்லுக்கு உலகம் முழுக்கவே மரியாதை உண்டு என்றாலும் இத்தாலியர்கள் இதற்கு கொடுக்கும் மரியாதை.. அலாதியானது. ஒரு மாவட்டத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய விவசாய விளைபொருட்கள் இதையெல்லாம் கண்டறிந்து ஒருங்கிணைப்பது என்பதே பெரிய சவாலான பணி. இப்படியிருக்க, உலகம் முழுக்க இருக்கும் பாரம்பரிய விவசாயிகள், பாரம்பரியம் மிக்க விளைபொருட்கள், உணவு பொருட்களையெல்லாம் கண்டறிந்து அனைத்தையும் ஓரிடத்தில் ஒருங்கிணைப்பது அசாத்திய சாதனையே!

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

இதை, இந்த பூமிக்கு செய்யும் சேவையாகவே கருதி தற்போது (அக்டோபர் 23 முதல் 27 வரை) உலக மகா திருவிழாவாக கொண்டாடிக்  கொண்டிருக்கிறது ஸ்லோ ஃ புட் எனும் அமைப்பு. உலகம் முழுக்க இருக்கும் பழங்குடி மக்களின் விவசாயத்தில் விளையும் பொருட்கள், அவற்றின் மூலமாக தயாராகும் உணவுகள், அவர்களின் வாழ்க்கை முறை என்று அனைத்தையுமே ஆவணப்படுத்துவதோடு... உலக மக்களின் கண்களுக்கும் நேரடி காட்சிப்படுத்தும் வேலையும் செய்கிறது இந்த அமைப்பு.

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

இதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில உலக உணவு திருவிழாவை நடத்துகிறது. ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவுக்காக முதல் நாளில் இருந்தே மக்கள் சாரை சாரையாக திரண்டு வரும் காட்சி அலாதியானது. காலை 10 மணிக்கெல்லாம் நுழைவாயிலில் திரளும் கூட்டம், இரவு 11 மணி வரையிலும் களைவதே இல்லை.
இத்தாலியின் வடமேற்கு திசையில் இருக்கும் டுரின் (டொரினோ) எனும் பழமையும் கலாச்சாரமும் நிறைந்த நகரில் நடக்கும் இந்நிகழ்வுக்காக கிட்டத்தட்ட உலகமே இங்கு கூடியிருக்கிறது.

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் எத்தியோபியா, எந்த நேரமும் குண்டுவெடிக்கும் பாலஸ்தீனம், உயிருக்கு உத்தரவாதமில்லாத ஆப்கானிஸ்தான் தொடக்கி செல்வ செழிப்பான அமெரிக்கா வரை அத்தனை நாடுகளில் இருந்தும் விவசாயிகள் வந்துள்ளனர். தங்களின் விளைபொருட்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க.

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

170 நாடுகள்..
3 ஆயிரம் வெளிநாட்டு விருந்தினர்கள்
1200 ஸ்டால்கள்..
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்...
தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்...
பாரம்பரியத்துக்கு பெருமை சேர்க்கிறது இத்தாலி!

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

விவசாயமும் உணவும் பன்னாட்டு முதலாளிகளின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதுதான் ஸ்லோ ஃபுட் அமைப்பின் ஒருவரி மந்திரம். இந்த மந்திரத்தை உலகமே உச்சரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்லோ ஃபுட் அமைப்பை உருவாக்கி உலகையே திரும்பி பார்க்க
வைத்துக் கொண்டிருப்பவர்... கார்லோ பிட்ரானி எனும் 65 வயது இளைஞர். இவரிடம் பேச்சுகொடுத்தால் மறைந்த நம்முடைய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் பேசுவது போலவேதான் இருக்கிறது. சிரிக்க சிரிக்க பேசி சிந்திக்க வைக்கிறார்.

இத்தாலியில் ஓர் உலக உணவு திருவிழா!

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிநாட்டு நிருபர் ஒருவர், 'இந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபரின் மனைவி மிசேல் ஒபாமா வீடியோ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறாரே... இதை எதிர்பார்த்தீர்களா?' என்று கேட்டார்.

"வந்துதானே ஆக வேண்டும் வேறெங்கு செல்ல முடியும் எல்லாருமே பாரம்பரியம் நோக்கி வந்துதானே ஆகவேண்டும்.எனவே எதிபார்க்கவே செய்தேன்" என்றார் கார்லோ பிட்ரானி.