Published:Updated:

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடக்க வாய்ப்பில்லை!

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடக்க வாய்ப்பில்லை!
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடக்க வாய்ப்பில்லை!
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடக்க வாய்ப்பில்லை!

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் தண்டனையை ரத்து செய்து ஜாமீன் அளிக்குமாறும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா, ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். அப்போது, மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையை அக்டோபர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு வருகின்ற டிசம்பர் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று நடக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் ஜெயலலிதாவின் மனு இடம்பெறவில்லை. அதனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை இன்று நடைபெற வாய்ப்பில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.