Published:Updated:

மோடி பெயரில் ரயில்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு!

விகடன் விமர்சனக்குழு
மோடி பெயரில் ரயில்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு!
மோடி பெயரில் ரயில்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு!
மோடி பெயரில் ரயில்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு!

புதுடெல்லி: வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இந்திய பிரதமர் மோடி பெயரில் `மோடி எக்ஸ்பிரஸ் ` சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில்  இருந்து  சிட்னி வரை 870 கிலோமீட்டர் தூரம் `மோடி எக்ஸ்பிரஸ் `இயங்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்கள் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியா - ஆஸ்திரேலிய  சமுதாயக் கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் பாலேஸ் சிங் தங்க்கர் கூறுகையில், மோடியின் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இந்த சிறப்பு ரயில் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். மோடியின் ரசிகர்கள் நாங்கள்.

ஆஸ்திரேலியாவில் மட்டும் 2,95,300 பேர் புலம்பெயர் இந்தியர்கள் வசிக்கிறோம். மோடி, வரும் நவம்பர் 15 ஆம் தேதி பிரிஸ்பன் நகரில்  ஜி-20 உலகநாடுகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார் என்பதை ஒட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் அவர், மோடியின் வருகை இந்திய- ஆஸ்திரேலியாவின் உறவைப் பலப்படுத்தும்  என்றும், 'மோடி எக்ஸ்பிரஸ்' அறிவிப்பு வெளியான 2 நாளில் 21,000 பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட் கேட்டு பதிவு செய்துள்ளனர் என்றும் கூறினார்.