Published:Updated:

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!
##~##

''தலைமைச் செயலகமே கொடநாட்டுக்கு நகர்ந்துவிட்டது!'' என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 28-ம் தேதி முதல்வர் கொடநாட்டுக்குப் போனபோது அங்கே ஹெலிகாப்டர் இறங்க முடியாமல் கோவைக்கே திரும்பியது. நடுவானில் சில நிமிடப் பதற்றம். ஆனாலும், முதல்வர் கூலாக இருந்துள்ளார். கொடநாடு எஸ்டேட்டுக்கு உட்பட்ட ஏரியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஹெலிபேட் அமைத்தனர். அந்த இடத்தை வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாது. எப்போதும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும். போலீஸ் வாட்ச் டவர்கூட உண்டு. அங்கேதான் அன்று முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் இறங்குவதாக ஏற்பாடு.''

''ஹெலிகாப்டரில் யார் யார் இருந்தனர்?''

''இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்கலாம். முதல்வர், சசிகலா, உதவியாளர் ராணி, பாதுகாப்பு அதிகாரிகள் இருவர், கோட்டை அதிகாரி இருவர்... என ஏழு பேர் பயணித்தனர். கோவையை விட்டுக் கிளம்பும்போது, நீலகிரி தொட்டபெட்டாவில் உள்ள டவருடன் தொடர்புகொண்டு வானிலை நிலவரம் பற்றி கேட்டனர். 'இங்கே பனிமூட்டம் இருக்கிறது. ஆனால், அது நீங்கள் இங்கே வருவதற்குள் க்ளியர் ஆகிவிடும்’ என்று மறுமுனையில் சொல்லியிருக்கிறார்கள். அப்போதே விமானி யோசித்தாராம். 'கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போமே?' என்று முதல்வரிடம் சொல்ல... ''நோ... நோ... பயப்படாமக் கிளப்புங்க. போய் பார்க்கலாம்'' என்று சிரித்தபடி உற்சாகப்படுத்தினாராம். எப்போது கொடநாடு வந்தாலும், பகல் 12.30 மணிக்கு கொடநாடு எஸ்டேட்டுக்குள்  நுழைவதுபோல் வருவது முதல்வரின் வழக்கம். அன்றும் அப்படித்தான் தீர்மானித்திருந்தாராம். விமானியும் ஓகே மேடம் என்று சொல்லி ஹெலிகாப்டரைக் கிளப்பினாராம்.''

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

''கொடநாடு வரை போய்விட்டாரா?''

''கொடநாடு வியூ பாயின்ட்டுக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்திருக்கிறது. முதல்வரை கொடநாடு எஸ்டேட் ஹெலிபேடில் வரவேற்க, மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட சிலர் காத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டரை, வானில் பார்க்க முடியவில்லை. பனிமூட்டம் அதிகமாகி இருந்ததால், கீழே நின்றவர்களால் பைனாகுலரில்கூட பார்க்க முடியவில்லை. சில நிமிடங்கள் வானில் வட்டமடித்தபடி, அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கினார்களாம். எதிரில் என்ன இருக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு அடர்த்தியான பனி சூழ்ந்திருந்ததாம். சில நிமிடங்களில் அது விலகிவிடும் என்று எதிர்பார்த்து வானில் வட்டமடித்திருக்கிறார் விமானி. ஆனாலும், அது விலகுவதாகத் தெரியவில்லை. கோவை விமான நிலையத்துக்குத் தகவல் சொல்லிவிட்டு, ஹெலிகாப்டரைத் திருப்பினாராம் விமானி.''

''கீழே இருந்தவர்கள் பதறிப்போயிருப்பார்களே?''

''கொடநாடு ஏரியாவில் பருவ மழை சீஸன் இது. நீலகிரியின் வேறு சில பகுதிகளில் கனமழை பெய்துவந்தது. நிலச்சரிவும்கூட ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்து ஏன் முதல்வர் ஹெலிகாப்டரில் பறக்க ரிஸ்க் எடுத்தார்?''

''அவர் துணிச்சலாக முடிவெடுப்பதில் வல்லவராச்சே! 'லேசான பனிமூட்டம்தான்... தைரியமா இறக்குங்க’ என்று சொன்னாராம். ஆனால், விமானிதான் ரிஸ்க் எடுக்கவில்லை என்கிறார்கள். அதன் பிறகு கோவைக்குத் திரும்பி வந்தவர், கொடநாட்டுக்கு காரில் பயணமானார். வெள்ளியன்று எமகண்ட நேரம் 3.00 - 4.30 மணி வரை. அதற்கு முன்பே காரை விரட்டிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டார். வழியில் எங்கு மக்கள் கூட்டமாக நின்றாலும், வழக்கமாக காரை நிறுத்தி மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த முறை எங்கேயும் கார் நிற்கவில்லை. எஸ்டேட் வாசலில் காத்திருந்த கட்சிப் பிரமுகர்களிடம் மட்டும் சால்வைகள் பெற்றுக்கொண்டு விர்ரென்று உள்ளே போய்விட்டார்.''

''அப்பாடா... அதிகாரிகள் நிம்மதி அடைந்திருப்பார்களே?''

''கோவையில் இருந்து புறப்பட்ட முதல்வரின் கார், மேட்டுப்பாளையம் அருகே செல்லும்​போது வழியில் பவானி ஆற்றுப் பாலத்தை கிராஸ் செய்திருக்கிறது. தொடர்ந்து பெய்த மழையில் பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. பாலத்தின் பாதியில் முதல்வரின் கார் ஒரே ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டது. கரைபுரண்டு ஓடும் தண்ணீரைப் பார்த்து முதல்வர்  சந்தோஷப்பட்டாராம். மலை ஏறும் வரையிலுமே முதல்வரின் முகத்தில் சந்தோஷம்தான். என்ன காரணமோ தெரியவில்லை. கொடநாடு பங்களாவை நெருங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு அவருடைய முகம் மாறிவிட்டதாம்.''

''என்ன டென்ஷனோ?''

''தெரியவில்லை! கொடநாடு பங்களாவைச் சுற்றி பாதுகாப்புக்காக போலீஸார்  குவிக்கப்பட்டிருந்தனர். அப்படி பாதுகாப்புப் பணியில் இருந்த சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருண் என்பவரை விஷப்பாம்பு கடித்து​விட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் முதல்வரின் கவனத்துக்குப் போனது. உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர், 'எப்படிப் பாம்பு கடிச்சது? எங்கே அவர் நின்றிருந்தார்?’ என்று விசாரித்துவிட்டு, 'அதிகம் புதர் இருக்கும் இடத்தில் யாரும் நிற்க வேண்டாம். இங்கே பாதுகாப்புக்கு வந்திருக்கும் அனைவருக்கும், முழங்கால் வரை அணியும் ஷூ உடனடியாக கொடுக்கச் சொல்லுங்கள். என்னோட பாதுகாப்புக்கு வந்து அவர்களுக்கு எதுவும் பிரச்னை ஏற்படக் கூடாது. கவனமா பார்த்துக்கோங்க...’ என்று அட்வைஸ் சொல்லி அனுப்பினாராம்.''

''முதல்வர் சென்னை திரும்பும் வரை கொடநாடு செய்திகளை லைவ்வாகக் கொடும்!'' என்று நாம் சொல்ல... தலையாட்டிய கழுகார், அடுத்த செய்திகளுக்கு வந்தார்.

''அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு விஜயகாந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏழு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் அடுத்து என்ன செய்வது என்று, அ.தி.மு.க-வின் இரண்​டாம் கட்டத் தலைவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றனர். 'இப்போதைக்குப் போட்டி தே.மு.தி.க. உருவாக்கும் முயற்சிகள் எதுவும் வேண்டாம். உங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துசெய்யச் சொல்லி சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் எழுதினால்தான், உங்களுக்குப் பிரச்னை. ஆனால், அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை. தனது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காப்பாற்றியாக வேண்டும் என்றால், விஜயகாந்த் அப்படிச் செய்ய மாட்டார்’ என்று சொல்லிவிட்டார்களாம். எனவே, மையமாக ஒரு பதிலைத் தயார் செய்துகொண்டு இருக்கிறார்கள் அதிருப்தி ஆட்கள்!''

''கனிமொழி வெற்றிக்குப் பிறகு தி.மு.க. எப்படி இருக்கிறது?''

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

''மகளை எம்.பி. ஆக்கியதில் கருணாநிதிக்கு இரட்​டிப்பு சந்தோஷம். 'தங்கையின் வெற்றிக்காக அண்ணன் எப்படி எல்லாம் உழைக்கிறார் பார்’ என்று ஸ்டாலினைப் பாராட்டி ராஜாத்தி அம்மாளிடம் பேசிக்கொண்டு இருந்தாராம் கருணாநிதி. 'அவர் நல்லாவே வேலை பார்த்தார். இடையில் யாராவது புகுந்து கெடுக்காமல் இருந்தால் போதும்’ என்று ராஜாத்தி கமென்ட் அடித்தாராம்!''

''அழகிரியைப் பார்த்தாரா கனிமொழி?''

''அழகிரியிடம் போனில் பேசினாராம். 'என்னால் உன்னை வாழ்த்த மட்டும்தான் முடியும். வேறு எந்தக் காரியமும் செய்ய இயலாது’ என்றாராம் அழகிரி. 'உங்கள் வாழ்த்து இருந்தால் போதும்’ என்றாராம் கனிமொழி. வெற்றி பெற்ற பிறகும் போனில் பேசி வாழ்த்து வாங்கியுள்ளார் அதேபோல கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனின் வீடு தேடிச்சென்று வாழ்த்துப் பெற்றுள்ளார் கனிமொழி!''

''உடனடியாக சோனியா, பிரதமரை சந்தித்து​விட்டார்களே?''

''வரும் வாரம்தான் சந்திக்கத் திட்டமாம். டி.ஆர்.பாலு ஏதோ வெளிநாட்டுப் பயணம் போகிறாராம். அதனால்​தான் உடனடியாகப் போய்ப் பார்த்துவிட்டார்கள். இருவருமே கருணாநிதியைப் பற்றியும் அவரது உடல்நிலை​யைப் பற்றியும் விசாரித்துள்ளனர். கூட்டணிக்கான அச்சாரம்தான் இது என்று இரண்டு கட்சியிலும் சொல்கிறார்கள்!''

''தமிழகத்துக்கான காங்கிரஸ் கட்சிப் பொறுப்​​பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்திருந்தாரே?''

''ம். கட்சி நிர்வாகிகளுக்கான கூட்டத்துக்காக வந்திருந்தார். அவரோடு, புதிய தேசியச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் இருந்தனர். தங்கபாலு வந்திருந்தார். கூட்டம் முடிந்த பிறகுதான் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் வந்தனர். மரியாதை நிமித்தமாக, முகுல் வாஸ்னிக்குக்கு சால்வை அணிவித்துவிட்டுக் கிளம்பினர். கூட்டத்தில் பேசிய முகுல் வாஸ்னிக், 'நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால், கட்சி வளர்ச்சிப் பணிகளில்  ஆர்வத்துடன் ஈடுபடுங்கள். பூத் கமிட்டி அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும். விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் பொதுக் கூட்டம் போட்டு, கட்சி வளர்ச்சிப் பணிகளைக் கவனிக்க வேண்டும்'' என்று பொதுவாகப் பேசினாராம்.''

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

''ஓஹோ!''

''காலையில் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துவிட்டு மீண்டும் மாலையில் சத்தியமூர்த்தி பவனுக்கு முகுல் வாஸ்னிக் வந்தாராம். அப்போது அங்கிருந்த தொண்டர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாராம். தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்த 20 பேர் தனியாக மனு கொடுத்தார்களாம். 'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று நான்கு காந்தி தலைமையிலும் கட்சிப் பணி செய்துவருகிறோம். எங்களுக்கு எவ்வித முக்கியப் பொறுப்புகளும் தரவில்லை. தனிக் கட்சி தொடங்கியவர்களுக்குத் துணை போனவர்களுக்கு, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. காலம் காலமாக காங்கிரஸ் கட்சியே தஞ்சம் என்று இருப்பவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு தர வேண்டும்’ என்று வலியுறுத்தினார்களாம். இன்னொரு டீம் ஒரு புகார் மனு கொடுத்தார்களாம், அதை வாங்கிக்கொண்ட முகுல் வாஸ்னிக், 'உங்கள் புகார் பற்றி விசாரிக்கிறேன். பொய்ப் புகார் என்றால், உங்கள் மீதே நடவடிக்கை எடுப்பேன். சஸ்பெண்ட் மட்டுமல்ல; கட்சியில் இருந்தே தூக்கிவிடுவேன்'' என்று எச்சரித்து அனுப்பினாராம்.''

''காங்கிரஸில் இதெல்லாம் சகஜம்தானே!''

''பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 28-ம் தேதி மாலை மு.க.ஸ்டாலின், மதுரை வந்தார். 10, 12-ம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் விழா தி.மு.க. சார்பில் நடந்தது. 1,682 மாணவர்களுக்கும் நான்கு மணி நேரம், நின்றுகொண்டே பரிசு வழங்கினார் ஸ்டாலின். சென்னையில் நடந்த அரசு விழாவில் நடந்த குளறுபடிகளுக்குப் பதில் சொல்வது மாதிரி இதைப் பக்காவாக தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது. அன்று மாலை விருதுநகர் நிதியளிப்பு விழாவில் கலந்துகொண்டவர், மறுநாள் 30-ம் தேதி, உத்தரகாண்ட் மீட்புப் பணியில் இறந்த மதுரை விமானி பிரவீன்குமார் வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்தார். பிரவீன் வீட்டுக்குச் செல்லும் வழியில்தான் பொட்டு சுரேஷ் வீடு இருப்பதாக கட்சியினர் ஞாபகப்படுத்த, சிறிது நேரம் யோசித்த ஸ்டாலின், பொட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு பிரவீன் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவுசெய்தார்.''

''அப்படியா?''

''பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு ஆறு மாத காலத்தில், பலமுறை ஸ்டாலின் மதுரைக்கு வந்திருக்கிறார். பாளையங்கோட்டை சிறையில் பொட்டு இருந்தபோது, அழகிரி போய் பார்க்கவில்லை. ஆனால், அப்போது ஸ்டாலின் போய் பார்த்தார். அப்படிப்பட்டவர், பொட்டு சுரேஷ் மரணமடைந்ததற்கு துக்கம் விசாரிக்க வரவில்லை என்ற ஆதங்கம் பொட்டு குடும்பத்துக்கு இருந்தது. அதற்குக் காரணம், அட்டாக் பாண்டி ஸ்டாலின் ஆள் என்ற பேச்சு மட்டுமில்லாமல், பொட்டு கொலை வழக்கில் ஸ்டாலின் பேரையும் சிலர் இழுத்துவிட்டனர். இந்த நிலையில்தான் ஸ்டாலின், ஆறு மாதங்கள் கழித்து, இப்போது பொட்டு வீட்டுக்குச் சென்றதை கட்சியினர் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பொட்டு சுரேஷ் மனைவி, 'கட்சிக்காக உழைத்த என் கணவரைக் கொன்றவர்களை, போலீஸ் இன்னும் கைதுசெய்யவில்லை. கட்சியும் இது சம்பந்தமாக எந்த அறிக்கையும் விடவில்லை. 'அண்ணனும்’ எங்களைக் கைவிட்டுவிட்டார். நீங்களாவது எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று அழுதிருக்கிறார். ஸ்டாலின் எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

அட்டைப்படம்: சு. குமரேசன்

படங்கள்: ரா.ராம்குமார், பா.கார்த்திக்

கைது சூழலில் விஜயகாந்த்!

மிஸ்டர் கழுகு: தைரியமா இறக்குங்க!

நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகச் சொல்லி விஜய்காந்த் மீது அவதூறு வழக்கு போடப்பட்டிருந்தது.  இந்த வழக்கில் ஆஜராவதற்காக 1-ம் தேதி விஜயகாந்த் நாகர்கோவில் வந்தபோது கோர்ட்டில் அடிதடி கலாட்டா அரங்கேறியது.

விஜயகாந்த் வழக்குக்கு முன்பு ஒரு கொலை வழக்கு விசாரணை. அப்போது உள்ளே வந்த விஜயகாந்த் சாட்சிக்கூண்டில் நின்றார். வெளியே அவருடைய தொண்டர்கள் 'கேப்டன் வாழ்க’ என கோஷம் போட்டபடி இருந்தனர். இதனால் கடுப்பான அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், 'கோர்ட்டில் இப்படி கோஷம் போட்டால் எப்படி வாதாடுவது? அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று நீதிபதியிடம் முறையிட்டார். ஞானசேகரனை விஜயகாந்த் உற்றுப்பார்க்க... 'என்னை ஏன் கோபமாகப் பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஞானசேகரன். உடனே தே.மு.தி.க. வழக்கறிஞரான ஜெகன்நாதன் ஏதோ சொல்ல... தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் காயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர் புகார் கொடுக்க, விஜய்காந்த் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது.

அதே நாளில், சென்னையில் நடந்துவரும் இன்னொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜர் ஆகாததால் விஜயகாந்த்துக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் விஜயகாந்த் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்னும் சூழலை உருவாக்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism