Published:Updated:

பிரதமர், சிதம்பரம், சிபல் ஆஜராக சம்மன் அனுப்புக: ராசா

பிரதமர், சிதம்பரம், சிபல் ஆஜராக சம்மன் அனுப்புக: ராசா
பிரதமர், சிதம்பரம், சிபல் ஆஜராக சம்மன் அனுப்புக: ராசா

புதுடெல்லி, ஆக.24,2011

பிரதமர், சிதம்பரம், சிபல் ஆஜராக சம்மன் அனுப்புக: ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியாக விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் கபில் சிபல் ஆகியோருக்கு சம்மன் அனுப்புமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தை முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். ##~~##

ஸ்பெக்‍ட்ரம் ஊழல் வழக்‍கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார், "பிரதமர், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தற்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் நீதிமன்றத்தில் சாட்சிகளாக ஆஜராவதற்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று நான் (ஆ.ராசா) இன்று கேட்டுக்கொள்கிறேன்," என்று கோரிக்கையை முன்வைத்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்படவில்லை என நிரூபிப்பதற்காகவே அம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் ராசா தரப்பில் கோரப்பட்டது.

மேலும், சிபிஐ தன்வசம் வைத்துள்ள சில குறிப்பிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆ.ராசா தரப்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு