Published:Updated:

அணு உலைப் பாதுகாப்பு உலகத்தரத்தில் உள்ளது: பிரதமர்

அணு உலைப் பாதுகாப்பு உலகத்தரத்தில் உள்ளது: பிரதமர்
அணு உலைப் பாதுகாப்பு உலகத்தரத்தில் உள்ளது: பிரதமர்

புதுடெல்லி, ஆக.24,2011

அணு உலைப் பாதுகாப்பு உலகத்தரத்தில் உள்ளது: பிரதமர்

இந்தியாவில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், அணு மின் நிலையங்கள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார். ##~~##

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து பிஜேபி மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கேள்வி எழுப்பினார்.

ராஜஸ்தானில் ஏற்கெனவே 6 அணு உலைகள் இயங்கி வரும் நிலையில், தற்போது 7-வது உலைக்கான பணிகள் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட அவர், ஜப்பானின் ஃபிகுஷிமா துயரத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஃபிகுஷிமா நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவிலுள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியாவில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், நமது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் மற்றும் அணு தயாரித்து இருப்பு வைத்து இருக்கும் இடம் என இரண்டு இடங்களும் உலகத் தரத்துக்கு இணையாக மிக பாதுகாப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அணு உலைகளின் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை என்றும், மத்திய அரசு மிக கவனமாக இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு